25 December 2010

ஸ்ரீஆண்டாளும், மார்கழித் திருப்பாவைத் திருவிழாவும்......

 நீங்கள் ஆண்டாளின் படத்தைப் பார்த்திருப்பீர்கள், முக்கியமாகத் தலையில் பெரிய கொண்டை அதைச் சுற்றி முத்துமாலை, அந்த முத்து மாலையின் ஒரு பகுதி கொண்டையின் உச்சியிலிருந்து தொங்கி ஊஞ்சல் ஆட அழகோ அழகு...மாறு வேடப் போட்டியிலும், கல்யாணங்களில் மணப்பெண்கள் சிலர், 
ஆண்டாள் வேஷம் போட்டுவது மிக சகஜம்.  

அந்த அழகிய ஆண்டாளின் மார்கழி வைபவங்களும், திருப்பாவையும் இப்போது இங்கே பார்க்கலாம்.

ஸ்ரீஆண்டாளும் மார்கழியும்
மார்கழியும் ஸ்ரீ ஆண்டாளும்

"மாதங்களில் நான் மார்கழி" என்று கீதையில் அருள்கிறார் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா.  நாம் குறிப்பிடும் ஓர் ஆண்டு என்பது தேவர்களுக்கு ஒரு நாள்.  அந்த நாளின் அதிகாலைப் பொழுது ---- மார்கழி.  தேவர்களது
பிரம்ம முகூர்த்த காலமாகிய மார்கழியில், இறைவனை வழிபட்டால், சகல நன்மைகளும் உண்டாகும் எங்கின்றன சாஸ்திரங்கள்.  எனவேதான் ஆண்டாளும் மார்கழி மாதத்தைத் தேர்ந்தெடுத்து " திருப்பாவை
நோன்பு" ஏற்றாள்.  ஆண்டாளின் அவதாரத் தலமான ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்த மார்கழி மாதத்தில் நடைபெரும் திருப்பாவைத் திருவிழா சிறப்பு வாய்ந்தது.

திருப்பள்ளியெழுச்சி:

அதிகாலை நேரத்தில், திருப்பள்ளியெழுச்சி, திருப்பல்லாண்டு மற்றும் திருப்பாவை பாசுரங்கள் ஆண்டாள் முன்பாக பாடப்படுகிறது. அதன் பிறகு, காலைநேர விஸ்வரூப தரிசனம் முடிந்தவுடன், ஸ்ரீஆண்டாளுக்கு
நடைபெறும் ஆராதனைகள் பக்தர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டவை.

அமுது நைவேத்தியம் செய்யப்படும்போத, திருப்பாவையில் வரும் "சடாரைவெல்லும் சீர் கோவிந்தா" என்ற பாசுரம் பக்தர்களால் உணர்ச்சிகரமாகப் பாடப்படும்.  பிறகு, தீர்த்தம், சடாரி ஆகியவற்றுடன் பிரசாதம் வழங்கப்படும்.  குளிர் மிகுந்த அந்த அதிகாலை நேரத்தில்.....ஸ்ரீகருடாழ்வார், ஸ்ரீஆண்டாள் சமேதராக எழுந்தருளும் ஸ்ரீரங்கமன்னாரை திருப்பாவை பாடி வணங்கும்போது மனதுக்குக் கிடைக்கும் பரவசமே தனிதான்.


ஸ்ரீஆண்டாள் உற்ஸவம்

மார்கழி நிராட்ட உற்ஸவம்: 

மார்கழி மாதம் 23ஆம் தேதி இரவு தொடங்கும் இந்த ஆண்டாள் நீடாட்ட உற்ஸவம், தை மாதப்பிறப்பு வரைக் கொண்டாடப்படும்.  மார்கழி 22ஆம் தேதி இரவு,  "பிரியா விடை" வைபவம் நடைபெரும்.  ஸ்ரீவடபெருங்கோயிலுடையான் சந்நிதிக்கு எழ்ழுந்தருளும் ஆண்டாளுக்கு, அங்கே மகா மண்டபத்தில் தனியாக திருமஞ்சனம் [அபிஷேகம்] நடக்கும்.  பிறகு, பக்தர்கள் மலை மழை பொழிய, வேத கோஷம் முழங்க.... புஷ்பக்கொண்டை அலங்காரத்துடன், மூலஸ்தானத்துக்கு ஸ்ரீஆண்டள் அழுந்தருள்கிறாள்.  தொடர்ந்து, வடபத்ரசாயி பெருமாளுடன் சேர்ந்து காட்சிதரும் ஆண்டாளுக்கு திருவாராதனம் எனப்படும் பூஜை நடைபெறும்.  பிறகு சந்நிடியில் திரை போடப்படும்.  திருப்பாவை நோன்பு ஏற்க வடபெருங்கோயிலுடைனிடம் ஆண்டாள் அங்கே அனுமதி வேண்டுவதாக ஐதீகம். சிறிது நேரத்துக்குப் பிறகு, திரை நீக்கப்ப்ட்டு, அரையர் ஸ்வாமியால்... 



"மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் நெடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனி செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்....

என்ற திருப்பாவை முதல் பாசுரத்துக்கு விளக்கம் சொல்லப்படும்.  திருப்பாவையின் மற்ற பாசுரங்களும் சொல்லப்படும்.  காலை வேளையில், மக்களுக்கான தரிசனம் முடிநு, ஸ்ரீ ஆண்டாள் பெரியாழ்வார் சந்நிதி
வாசலை அடைகிறாள்.  அப்போது அரையர் ஸ்வாமி திருப்பல்லாண்டு பாடுவார்.  

நீராட்ட உற்ஸவத்தின் ஒவ்வொரு நாளும், தங்கப் பல்லக்கில் வடபெருங்கோயிலின் ராஜகோபுர வாசலில் ஸ்ரீ ஆண்டாள் எழுந்த்ருள,  "நாள்பாட்டு  வைபவம் நடைபெறும் - ஒவ்வொரு நாளும் அந்த நாளுக்கான திருப்பாவைப் பாடல் பாடப்படுவதே இந்த நிகழ்ச்சி.

"மாலே! மணிவண்ணா! மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தையெல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத்து உன் பாஞ்சசன்னியமே
போல் வன சங்கங்கள் போய்ப்பா டுடையனவே
சாலப்பெரும் பறையே பல்லாண்டிசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலி னிலையாய்! அருளேலோ ரெம்பாவாய்.

இந்த "மாலே மணிவண்ணா".....பாசுரத்தை ஸ்ரீ ஆண்டாளே சொல்வதாக ஐதீகம்.  இந்தப் பாடல் "ஆலி இலையாய் அருளேலோ எம்பாவாய்" என்று முடிவுறும் சம்ஸ்கிருதத்தில் "வட விருட்சம்" என்றால் ஆலமரம் என்றும் பொருள்.  ஆக....."வடபத்ரசாயி " என்பதையே, " ஆலின் இலையாய் " என்று அழகுத் தமிழில் ஆண்டாள் கூறுகிறாள் போலும்!!

ஸ்ரீஆண்டாள் நீராட்ட உற்ஸவத்தின் 2- ஆம் நாள் - கள்ளழகர் திருக்கோலம்.  3-ஆம் நாள்-  கண்ணன் கோலம். 4-ஆம் நாள் - முத்தங்கி சேவை.  5-ஆம் நாள் - பெரியபெருமாள் கோலம்.  6ஆம் நாள் - மஹாராணியாக 
அமர்ந்த கோலம்.  7- ஆம் நாள் - தங்க கவச சேவை.... என சிறப்பு தரிசனம் உண்டு.  

ஸ்ரீஆண்டாள்
எண்ணைய் காப்பு வைபவம்:

திருமுக்குளம் கரையில் உள்ள நீராட்ட மண்டபத்தில், மாலை 3 மணிக்கு ஆண்டாளுக்கு "எண்ணைய்  காப்பு" வைபவம் நடைபெரும்.  நெற்றிச்சுட்டி, தலை நாகர், தங்க ஜடை, சூரிய சந்திரர், ராக்கொடி ஆகிய தலை அலங்காரத்துடன் சவுரி தரித்து கோதா ராணியாக அமர்ந்த நிலையில் காட்சி தரும் ஆண்டாளின் அழகுக் கோலத்தைத் தரிசிப்பது பக்தர்கள் செய்த பாக்கியம்.

பிறகு, தலையில் அணிந்துள்ள ஆபரணங்களை ஒவ்வோன்றாக எடுத்து, தலையை கோதி, சிடுக்கு நீக்கி சுகந்த தைலம் சாத்துவர்.  இவ்வாறு, மூன்று முறை எண்ணை காப்பு சாற்றி, சவுரியை பெரிய கொண்டையாக முடித்து மலர் மாலைகள் அணிவிப்பர்.  இதனை தொடர்ந்து, "பத்தி உலாதுதல்" வைபவம் 
முடிந்து நீராட்ட வைபவம்.  அப்போது சங்க நிதி, பத்ம நிதி, மற்றும் ஆயிரம் துளைகள் கொண்ட வெள்ளித் தாம்பாளம் கொண்டு, மஞ்சள் மற்றும் திரவியப் பொடிகளால் அபிஷேகம்.  முடிவில் தங்கக் குடத்தால் அபிஷேகம் செய்யப்படும்.

இரவு, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில், ஸ்ரீவடபத்ரசாயி சந்நிதிக்கு எழுந்தருளி, தனது சந்நிதி திரும்புகிறாள் ஆண்டாள்.

எல்லா வைணவத் தருக்கோயில்லளிலும் "கூடாரை வல்லி" வைபவம் மார்கழி 27-ஆம் நாள் கொண்டாடப்படும்.  ஆனால், ஸ்ரீவில்லிபுத்தூரில் மட்டும் தை 1-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.  ஸ்ரீஆண்டாள் சந்நிதியில் ஆண்டாளின் சிம்மானத்தில், ஸ்ரீதேவி-பூதேவியுடன் ஸ்ரீபெரிய பெருமாள் எழுந்தருள ...அவருடன் ஸ்ரீஆண்டாள், ரங்கமன்னார், கருடாழ்வார் மற்றும் ஆழ்வார் -- ஆச்சார்யர்களும் எழுந்தருளி...

"கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா" முதலான திருப்பாவைப் பாடல்கள் பாடப்படும்.  அப்போது, "அக்கார அடிசல்" நைவேத்தியம் ஆக்கி, பிரசாதமாக தரப்படும்.  மறுநாள், தந்தையாகிய பெரியாழ்வார் சந்நிதியில் ஸ்ரீஆண்டாள் அழுந்தருளி " கணு வைபவம்" நடைபெறும்.
  


திவ்விய பிரபந்த உற்ஸவம்:

இங்கேயும் பகல் பத்து- ராப்பத்து உற்ஸவம் சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது. முதல் நாள் - ஸ்ரீஆண்டாள் தன் இல்லத்துக்குச் செல்லும் "பச்சை பரத்தல்" வைபவம் நடைபெறுகிறது.  பெரியாழ்வாரின் வம்சத்தில் வந்து வேதபிரான் பட்டர் இல்லம்.  இங்கே சந்நிதித் தெருவில் உள்ளது.  இங்கு வரும் ஆண்டாள், பச்சைக் காய்கறிகள் பரப்பி வைக்கப்பட்டிருப்பதை கண்டுகளிக்கிறாள்.  பிறகு, இந்த இல்லத்தில் செய்யப்பட்ட திரட்டுப்பால், மணிப்பருப்பு முதலான நைவேத்தியங்களை ஏற்று, பெரிய பெருமாள் சந்நிதிக்குச் செல்வாள்.

பகல் பத்து - ராப்பத்து எல்லா நாட்களும் அரையர் சேவை நடைபெரும்.  ராப்பத்து உற்ஸவத்தின் நடுவில்.....ஸ்ரீஆண்டாள், அவளின் வலப்புறம் ஸ்ரீபெரியபெருமாளும்,  இடப்புறம் - ஸ்ரீ ரங்கமன்னாரும் எழுந்தருள்வது 
கண்கொள்ளாக் காட்சி!!



ஸ்ரீஆண்டாள்
கோயில் அண்ணன் வைபவம்:

அரங்கனை அடையும் தனது விருப்பம் நிறைவேறினால், நூறு தடாவில் அக்கார அடிசிலும் வெண்ணெயும் கள்ளழகருக்கு சமர்ப்பிப்பதாக [நாச்சியார் திருமொழியில் - "நூறு நறும்பொழில்" பாசுரத்தில்]  பிரார்த்திக்கிறாள் ஆண்டாள்.  திவ்விய தேசங்களை தரிசித்து வந்த ஸ்ரீராமானுஜர், கள்ளழகர்கோயிலுக்கும் வந்தார்.  ஆண்டாளின் பிரார்த்தனை அவர் நினைவுக்கு வந்தது.  அழகருக்கு 100 தராவில் அக்கார அடிசிலும்
வெண்ணெயும் சமர்ப்பித்தார்.  பிறகு, அவர் ஸ்ரீவில்லிப்புத்தூர் கோயிலுக்கு வந்தபோது, "விக்கிரக வடிவான ஆண்டாள், வாரும் என் அண்ணலே" என்று எதிர்கொண்டு அழைத்தாளாம்!!  அன்று முதல், "கோயில் அண்ணன்" என்ற சிறப்புப் பெயர் ஸ்ரீராமானுஜருக்கு ஏற்பட்டது.  அதனால், ஸ்ரீஆண்டாளை வாழ்த்தும் வாழ்திருநாமப் பாடலில் ஒரு வரி " பெரும்புதூர் மாமுனிக்கு பின்னானாள் வாழியே" என்று வருகிறது.

அரையர் சேவை:

ஸ்ரீரங்கம், ஆழ்வார் திருகரி மற்றும் ஸ்ரீவில்லிப்புத்தூர் தலங்களில் இந்த அரையர் சேவை நடைபெருகிறது.

ஆழ்வார் பாசுரங்களை இயல், இசை, நாடகம் என முத்தமிழிலும் சொல்வார்கள் அரையர்கள்.  முதலில் இசையாகப் பாடியும், பிறகு அபிநயம் செய்து விளக்கியும், முடிவில் விளக்கவுரை தருவதும் அரையர்
சேவையாகும்.  இங்கு நாதமுனிகளின் வம்சத்தில் வந்த 80 வயதைக் கடந்த அரையர் ஸ்ரீ ஊ.வே. ஸ்ரீநிவாச ரங்காச்சார்யார், அவரின் மகங்கள் மற்றும் பேரன் ஆகியோர் இதை மிகச் சிறப்பாக செய்து வருகிறார்கள்.  


ஸ்ரீஆண்டாள்
பது மூத்தோர் சொல். எனவே திருமணம் ஆகாத கன்னிப் பெண்கள், இந்த மார்கழி மாதம் நோன்பிருந்து ஆண்டவனை வழிபடுவார்கள யானால், விரைவில் நல்ல கணவனை அடைவார்கள் என்பது திண்ணம். கண்ணபரமாத்மாவைகணவனாகஅடைய வேண்டும் என்பதற்காக காத்தியாயனியை[துர்கையின்ஒரு அம்சம்] பிருந்தாவனகோபிகைகள், நோன்பிருந்து பூஜித் துள்ளனர்.இது பற்றிய குறிப்பு, ஸ்ரீமத்பாகவத புராணத்தில் உள்ளது.

"விரதமிருந்து நல்ல கணவனை அடைவது' என்பது பாவை நோன்பின் புறப்பொருள். ஆண், பெண் என்னும் இருவகை ஜீவாத்மாக்களுமே பக்தி செய்து பரமனுடன் கலக்க அறிவுறுத்துவதே இந்த நோன்பின் அகப்பொருள். இக்கருத்தை உள்ளீடாகக் கொண்டு உருவானவையே மாணிக்கவாசகரின் திருவெம்பாவையும், ஆண்டாள் அருளிய திருப்பாவையும்!


ஸ்ரீஆண்டாள் சேவை
 திருப்பாவை, திருவெம்பாவை இரண்டிலுமே பெண்களை நித்திரையிலிருந்து எழுப்புகின்ற வகையில் பாடல்கள்அமைந்துள்ளன. "மாயை' என்னும் தூக்கத்தில் தன்னை மறந்து கிடக்கும் ஜீவாத்மாக்கள், விழிப்புணர்வு பெற்ற பரமாத்மாவை அடையவேண்டும் என்பதே ஆண்டாளுக்கும், மாணிக்கவாசகருக்கும் நோக்கம்.  இந்துமதத்தின் இரு கண்களாக சைவமும், வைணவ மும்விளங்கிவருகின்றன.எனவே மார்கழி மாதத்தில் அனைவரும், தங்கள் மரபுக்கேற்ப திருவாசகத்தையோ, திருப்பாவையையோ, அல்லது இரண்டையுமோ பாராயணம் செய்து பரமனின் அருள் பெறுக!

ஆண்டாள் சேவை திருப்பாவை.......


http://wn.com/Margazhi_Mahotsavam_Dhanur_Masam-Sri_Aandal_Sevai-Thirupavai_Pasurams_14-18




ஸ்ரீஆண்டாள்
ஸ்ரீஆண்டாள் துளசியின் அவதாரம் பூதேவியின் மறு அவதாரம் இவர் எழுதிய திருப்பாவை, திருவெம்பாவை மிகச் சிறப்பு வாய்ந்தவை மார்கழி மாதம் ஒவ்வொன்றாகப் பாட மனம் தூய்மை பெறும்....திருப்பாவை கற்றுக் கொண்டு பாடி நன்மைகள் பெறவும்!

22 December 2010

Arudra Darisanam [ ஆருத்ரா தரிசனம் ]

ARUDRA DARISANAM 


This is a festival , celebrated on the day of Thiruvadirai star in Margazhi month.It is essentially Shaivite festival and celebrates the Cosmic dance of Lord Shiva.
Arudra star is one of two stars that have the prefix "THIRU". Another star is Onamstar - "Thiruonam"favoured for Shiva andMahavishnu repectively.

Lord Nataraja - Cosmic Dance
Arudra denotes a Red Flame. Lord Shiva has also a name called "Semporjyoti" or "Golden Red Flame". It is in the form of light the lord performs his function of five activities which are Creation, Protection, destruction,Embodiment and Release. Nataraja is the manifestation of the Lord Shiva as a Light.In the month of Marghazhi , on the day when Thiruvadirai star and New Moon coincide , we celebrate the esctatic dance of Shiva.





Lord Nataraja Procession-Therottam
On the Thiruvadirai day in margazhi , Lord Natraja comes out in procession to give darshan to his devotees.In Sanskrit ‘Arthirai’ is called ‘Ardhra’ and the Thiruvadirai anointing ceremony is called Ardhra Abisheka and the Thiruvathirai viewing as Ardhra Darshan.It is held as a great achievement to view the Nataraja's procession in Chidambaram.

In Chidambaram abhishekam for the Lord on thiruvadirai day in Margazhi will be performed in a grand manner and the devotees will be given KALI as prasadham.Obtaining the prasadam , is attainment of bliss through the Lord.


Story behind why Kali is given as Prasadham :


A devotee named Sendanar had the habit of eating food after offerring it to Lord and then distribute among other devotees . Only the leftover he will eat.On the tiruvadirai day , due to constant bad weather he couldn't get any essential items for preparring proper meal.He had no other option but to mix water with rice flour and prepare a mashed paste.Lord Shiva understood his predicament.He wanted the people to know how sincere his devotee was to him.He disguised himself as a siva devotee and enjoyed what was given to him as food.And as he stood for a while in the Nataraja Sanctrum,The Lord Showered the Kali all over the premises , in recognition of his deep devotion.Since the day the miracle happened Kali is the special offering to Lord Nataraja on Margazhi.



The Legend Behind Arudhra darisanam :




Arudra Darisanam-Chidambaram Temple
Once when Mahaa Vishnu was lying down on the great Serpent Adhi sesha, Adhi sesha felt Mahaa Vishnu was quite heavy that time. He asked Mahaa Vishnu what was the reason. Mahaa Vishnu said that he was remembering and enjoying the Dance of Lord Shiva. The answer developed the desire in Adhi seesha to see the Great Dance of Lord Shiva. He asked Mahaa Vishnu how his desire could be fulfilled. Mahaa Vishnu asked him to go to Chithamparam and do "tapas". Adhi seesha came to Chithamparam and prayed the Lord for a long time.


There was another muni and devotee of Lord Shiva in that place, called Viyaagra paadha. He prayed to God to get the legs of tiger, so that he can pluck flowers early in the morning to offer to the God, before any bee touches the flower. He was also praying God to see His Great Dance for a long time.Pleased with their prayer the God appeared on the Thiruvaadirai day and danced in Chithamparam. The Nataraja image of the Lord is prayed with great devotion this day. In Chithamparam and other temples it is celebrated as Arudraa dharshanam. In this festival abhisheeka [holy anointing] of Lord Nataraja takes place early in the morning and then He comes around the town.  


In all Lord Shiva Teples Arudra Darshan is celebrated with great devotion.  Arudra Darisanam is celebrated with great devotion in the Hall of Gold - Kanakasabhai at Chidambaram; Thillai - The Hall of Silver Velli Sabhai at Madurai; The Hall of Rubies - RatnaSabhai at Tiruvalankadu; The Hall of Copper - TamaraSabhai at Tirunelveli and the Hall of Pictures - ChitraSabhai in Kutralam.
Lord Natarajar
Lord Nataraja will perform celestial dance. Special Abjshekam, yagam is held in the early morning. Special alankara, puja and deeparadhanai are held after abhishekam. Vedas and Thevaram are chanted and sung with great devotion. In Mylapore Lord Kapaleeswarar temple Aarudhra Darshan was celebrated on 21st December 2010.
Other Famous Shiva shrines : 
Next to Chidamabaram , the Shiva shrines at Perur, Kuttralam and Madurai are famous for this festival.


****************************

திருவாதிரை கொண்டாடுவது  ஏன் ?

மார்கழி மாதம் திருவாதிரையன்று ஆருத்ரா தரிசனம் நிகழ்ச்சி நடக்கிறது. நடராஜரின் திருநடனம் புரியும் கோயில்களில் இந்த விழா சிறப்பு. ஏன் தெரியுமா?


Lord Shiva- Natarajar in Cosmic Dance
சேந்தனார் என்னும் சிவபக்தர், தில்லையம்பலமான சிதம்பரத்தில் தன் மனைவியுடன் வாழ்ந்து வந்தார். சிவனடியார்கள் வந்தால் அவர்களின் மனம் கோணாமல் உபசரிப்பார். ஒருமுறை, அவ்வூரில் பலத்த மழை பெய்து விறகெல்லாம் நனைந்து விட்டது. அங்கு வரும் அடியவர்களுக்கு சமைத்துக் கொடுப்பதில் பிரச்னை ஏற்பட்டது. இந்த நேரத்தில் யாராவது வந்து விட்டால் அவர்களுக்கு அமுது படைப்பது எப்படி என்று கவலையில் இருந்தபோது, ஒரு சிவனடியார் வந்து சேர்ந்தார். இவர் தேஜசாக ஜடாமுடி தரித்துக் காணப்பட்டார். தம்பதிகளுக்கு கை, கால் உதறியது. ஈரவிறகால் சாதம் சமைப்பது எப்படி என்று யோசித்துக் கொண்டிருந்தார்சேந்தனாரின் மனைவி. இருந்தாலும், எப்படியோ ஒருவாறாக ஊதி நெருப்பு பற்றவைத்தார். அரிசியை மாவாக்கி, உளுந்து சேர்த்து வெல்லமும் நெய்யும் கலந்து களி தயாரித்துவிட்டார்.

அதை சிவனடியாருக்கு படைத்தார். அன்றைய தினம் மார்கழி பவுர்ணமி . திருவாதிரை நட்சத்திரம்.  வந்தவர் அதைச் சாப்பிட்டுவிட்டு, இத்தனை சுவையான களியை தன் வாழ்நாளிலேயே சாப்பிட்டதில்லை என்று சொல்லி மகிழ்ந்தார். ""தினமும் தயிர்ச்சாதமும், புளி சாதமும், சர்க்கரைப் பொங்கலும் சாப்பிட்டுப் பழகிப்போன எனக்கு தாங்கள் அளித்த களி மிகப் பிரமாதம்!'' என்றார். தம்பதியர் ஆனந்தம் கொண்டனர். மறுநாள் காலையில் அவர்கள் தில்லையம்பலம் நடராஜரைத் தரிசிக்கச் சென்றனர். கோயில் நடையெல்லாம் அவர்கள் தயாரித்த களி கொட்டிக் கிடந்தது. நடராஜரின் வாயில் சிறிதளவு களி ஒட்டியிருந்தது. தங்கள் வீட்டிற்கு எழுந்தருளியிருந்தது நடராஜரே என்பதை உணர்ந்து உடல் புல்லரித்துப் போயினர்.நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினர்.அன்றுமுதல் நடராஜப்பெருமானுக்கு திருவாதிரை நாளில் களியமுது படைக்கும் பழக்கம் உருவாயிற்று. திருவாதிரை நாளன்று விரதம் இருப்பது மிகவும் சிறந்தது என்கிறார் யாழ்ப்பாணம் ஆறுமுகம் நாவலர். அன்று சிறிதளவு களி மட்டும் சாப்பிடலாம்.


மற்றபடி உணவேதும் உட்கொள்வது கூடாது. அதிகாலை 3மணிக்கே எழுந்து, குளிர்ந்த நீரில் நீராடி, உங்கள் ஊரிலுள்ள சிவாலயத்தில் உள்ள நடராஜர் சந்நிதியில் நடைபெறும் திருவாதிரை அபிஷேகத்தை காலை 4 மணிக்கு கண்டு களிக்கலாம்."ஆதிரை' என்ற பெண்மணி திருமணத்தன்றே  கணவனை இழந்தாள். அவள் சிவனிடம் வேண்டி, கணவனின் உயிரை மீட்டாள். அவளது பெயராலேயே "திருவாதிரை' விழா உண்டானதாக கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு கதை வழங்கப்படுகிறது. திருவாதிரை நாளில் நடராஜர் நடனம் கண்டு, வாழ்வில் செல்வம் பெறுவோம்.

சிதம்பரம் நடராஜர்
தென்னக நடராஜர்கள் :

சிதம்பரம் நடராஜர் சிலை எப்படி இருக்கிறதோ, அதற்கு சற்றும் மாறாமல் நான்கு சிலைகள் அக்காலத்தில் வடிவமைக்கப்பட்டன. அவற்றைக் காண, திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள செப்பறை, கரிசூழ்ந்தமங்கலம், கருவேலங்குளம், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கட்டாரிமங்கலம் கோயில்களுக்கு செல்ல வேண்டும்.இந்த நான்கு கோயில்களுக்குமே ஒரே வரலாறு தான். உத்தரதேச மன்னன் சிங்கவர்மன், கொடுங்கோல் ஆட்சி செய்தான். பிற்காலத்தில் மனம் திருந்திதவமிருக்க காட்டிற்குச் சென்றான். அந்த காட்டில் வியாக்ரபாதரும், பதஞ்சலி முனிவரும் தவம் புரிந்து கொண்டிருந்தனர். அவர்களுக்கு இறைவன் திருநடனக்காட்சி அருளினார். அந்தக்காட்சியை சிங்கவர்மனும் கண்டான். முனிவர்களின் அறிவுரைப்படி நடராஜருக்கு சிதம்பரத்தில் கோயில் எழுப்பினான். நடராஜர் சிலை செய்யும்படி சிற்பிகளை பணித்தான்.

அவர்கள் தாமிரத்தால் ஒரு சிலையை செய்தனர். அதைப்பார்த்த அரசன் தாமிர சிலையே இவ்வளவு அழகாக இருக்கிறது என்றால், தங்கத்தால் செய்தால் எப்படி இருக்கும் என எண்ணிப்பார்த்தான்.தலைமை சிற்பியான நமச்சிவாய முத்து ஸ்தபதியிடம் ஏராளமான பொன் கொடுத்து சிலை செய்ய உத்தரவிட்டான். சிலை தயாரானது. ஆனால், அது தாமிரமாக மாறிவிட்டது. சிற்பிக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. மன்னனுக்கு தகவல் சென்றது. அவன் சிற்பியை சிறையில் அடைத்தான்.அன்றிரவு மன்னனின் கனவில் தோன்றிய சிவன், தான் தங்கமாக இருக்க விரும்பவில்லை என்றும், எனவே தாமிர சிலையாக மாறியதாவும் கூறினார். இதையடுத்து சிற்பி விடுதலை செய்யப்பட்டார்.இதையடுத்து, அந்த சிலையை சிதம்பரம் கோயிலில் அமைத்தனர். முதலில் செய்யப்பட்ட தாமிர சிலையை சிவனின் உத்தரவுப்படி தென்புறத்திற்கு நமச்சிவாய ஸ்தபதி தூக்கி வந்தார். எந்த இடத்தில் ”மை அதிகமாகிறதோ, அங்கே வைத்துவிட வேண்டும் என் சிவன் சொல்லியிருந்தார். தாமிரபரணி கரையில் செப்பறை என்ற இடத்திற்கு வரும் போது சிலை கனத்தது. அந்த இடத்திலேயே சிலையை வைத்துவிட்டார்.


                 மாணிக்க வாசகர்
ராமபாண்டியன் என்ற மன்னன் அவ்விடத்தில் ஒரு கோயில் கட்டினான். நடராஜருக்கு தனி சந்நிதி அமைத்தான். ராமபாண்டியனின் எல்லைக்குட்பட்ட பகுதியை ஆண்ட சிற்றரசனான வீரபாண்டியன், செப்பறையில் இருந்த நடராஜர் சிலையைக் கண்டான். அதேபோல் தனக்கும் இரண்டு சிலைகள் வேண்டும் என ஸ்தபதியிடம் கூறினான். சிலை செய்யும் பணி துவங்கியது. இதில் ஒன்றை கட்டாரிமங்கலத்தில் உள்ள கோயிலிலும், மற்றொன்றை கரிசூழ்ந்தமங்கலத்தில் உள்ள கோயிலிலும் வைக்க எண்ணினான். சிலை செய்யும் பணி முடிந்தது. சிலைகளின் அழகைக் கண்டு மன்னன் ஆனந்தம் கொண்டான். இதேபோல சிலைகள் வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது என்ற எண்ணத்தில் ஸ்தபதியை கொன்றுவிடும்படி காவலாளிகளுக்கு கட்டளையிட்டான். வீரர்கள் ஸ்தபதியின் மீது இரக்கம் கொண்டு அவரது கையை மட்டும் வெட்டிவிட்டனர். இதைக் கேள்விப்பட்ட ராமபாண்டியன், வீரபாண்டியன் மீது கோபம் கொண்டான்.

ஸ்தபதியின் கையை வெட்டிய வீரபாண்டியனின் கைகளைத் துண்டித்தான்.இவ்வாறு செய்யப்பட்ட இரண்டு சிலைகளும் கட்டாரிமங்கலம் மற்றும் கரிசூழ்ந்தமங்கலத்தில் உள்ள சிவாலயங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இதன் பிறகு ஸ்தபதிக்கு மரக்கை பொருத்தப்பட்டது. கலையார்வம் மிக்க ஸ்தபதி, மரக்கைகளின் உதவியுடன், முன்னைவிட அழகாக மற்றொரு சிலை செய்தார். அந்தச்சிலையின் அழகைப் பார்த்து அதன் கன்னத்தில் கிள்ளினான். கிள்ளிய வடுவுடன் கூடிய சிலை கருவேலங்குளம் கோயிலில் வைக்கப்பட்டது.

எப்படி செல்வது:



திருநெல்வேலிக்கு சற்று முன்புள்ள தாழையூத்தில் இருந்து ராஜவல்லிபுரம் செல்லும் விலக்கில் திரும்பி  செப்பறையை அடையலாம். அங்கிருந்து திருநெல்வேலி பைபாஸ் ரோடு வழியாக பத்தமடை செல்ல வேண்டும். பத்தமடையிலிருந்து கரிசூழ்ந்தமங்கலம் விலக்கில் திரும்பி 3 கி.மீ., தூரத்திலுள்ள கரிசூழ்ந்தமங்கலம் செல்லலாம்.



இங்கிருந்து பத்தமடை வழியாக நாகர்கோவில் செல்லும் ரோட்டில் 15 கி.மீ., சென்றால் கருவேலங்குளத்தை அடையலாம். பின்பு களக்காடு, நான்குநேரி, மூலக்கரைப்பட்டி வழியாக கட்டாரிமங்கலத்தை 40 கி.மீ., கடந்து அடையலாம்.  ஆருத்ரா தரிசனம் அன்று இந்தக் கோயில்கள் முழுநேரமும் திறந்திருக்கும். மற்ற நாட்களில் காலை 7.30-10 மணி, மாலை 5-6.30 மணி வரை திறந்திருக்கும்.

17 December 2010

வைகுண்ட ஏகாதசியின் சிறப்பு

இன்று தினம் [17-12-2010] , வைகுண்ட ஏகாதசி கொண்டாடப் படுகிறது. இந்த நாளின் சிறப்பு அம்சத்தைப் பற்றி அறிந்துக்கொள்வோம்.....



தேவியருடன் ஸ்ரீமாதவபெருமாள்[மயிலை]
ஏகாதசி பிறந்த கதை:

தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் மிகுந்த தொல்லைகள் கொடுத்து வந்தான் முரன் என்னும் அசுரன்.  இதனால் துன்பம் அடைந்த தேவர்கள், சிவப்பெருமானிடம் முறையிட்டனர். அவர்களை, திருமாலிடம் சரண்புகுமாறு அறிவுறுத்தினார் சிவனார்.

அதன்படி, அனைவரும் திருமாலிடம் சென்று வேண்டிக் கொண்டனர்.  அவர்களைக் காப்பாற்ற திருவுளம் கொண்ட திருமால், அசுரனுடன் போரிடத் துவங்கினார்.  ஆயிரம் ஆண்டுகள் நீடித்தது இந்த போர்.  முடிவில், போரில் களைப்படைந்தவராக பத்ரிகாஸ்ரமம் - குகைக்கு வந்து ஓய்வெடுத்தார் பெருமாள்.  அங்கேயும் வந்து போருக்கு அழைத்தான் முரன்.  அப்போது, திருமாலின் சக்தி ஒரு பெண் வடிவில் வெளிப்பட்டது.  இந்த கக்தியை அசுரன் நெருங்கும் வேளை.....அவளிடம் இருந்து வெளிப்பட்ட பெரும் ஓலம், அசுரனை எரித்து சாம்பலாக்கியது.

துயில் எழுந்த பெருமாள், "ஏகாதசி" என்று அந்தப் பெண் சக்திக்கு பெயரிட்டார்; "உன்னை வழிப்படுபவர் களுக்கு வைகுண்டம் அளிப்பேன்" என்று வரம் தந்தார்.

இந்த முதல் ஏகாதசி ஆரம்மமானது....மார்கழி மாதம் கிருஷ்ணபட்சத்தில் [தேய்பிறையில்].  எனவே,
மார்கழி மாத தேய்பிறை ஏகாதசியை "வைகுண்ட ஏகாதசி " என்று போற்றுகிறோம்.

ஏகாதசியின் தத்துவம்:

ஏகாதசி என்பதற்கு 11-ஆம் நாள் என்பது பொருள்.  ஞானேந்திரியங்கள் ஐந்து.  கர்மேந்திரியங்கள் ஐந்து.  [வாக்கு, பாதம், பாணி, பாபு, உபத்தம்]. மனம் ஒன்று ஆகிய பதினொன்றையும் பெரருமாளுடன் ஐக்கியப்படுத்தி தியானம் இருப்பதே பெருமாளுடன் ஓன்றி உபவாசம் இருப்பதையே ஏகாதசி புண்ணியதினம்  வலியுறுத்துகிறது.



ஸ்ரீவில்லிபுத்தூர்
சொர்க்கவாசல் திறக்கப்படுவது ஏன்?

ஸ்ரீமகாவிஷ்ணுவால் வதம் செய்யப்பட்டதால், பரமபத பாக்கியம் பெற்றவர்கள் மது-கடைபவர். இந்த அசுரர்கள், தங்களுக்குக் கிடைத்த வைகுண்டப் பேறு உலக மாந்தர்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்
என்று விரும்பினர்.

எனவே, "வைகுண்ட ஏகாதசி அன்று ஸ்ரீரங்கம் வடக்கு வாசல் வழியாக அர்ச்சாவதாரத்தில் [உற்சவ மூர்த்தியாக] தாங்கள் வெளிவரும்போது, தங்களை தரிசித்து பின்தொடரும் பக்தர்களது பாவங்களை நீக்கி
முக்தி அளிக்க வேண்டும்" என்று பெருமாளிடம் பிரார்த்தித்தனர்.  அப்படியே அருள் செய்தார் பெருமாள்.

இதன்பொருட்டே, சொர்க்க வாசலைத் திறந்து மோட்சத்துக்கு வழிகாட்டுகிறார் திருமால்!

விரதம் இருப்பது எப்படி?

ஏகாதசி முதல் நாள் தசமி அன்று திருமாலை வணங்கி விரதம் துவங்க வேண்டும்.  அன்று, பகலில் ஒரு வேளை மட்டும் சாப்பிடலாம்.  ஏகாதசியன்று அதிகாலையில் கண் விழித்து, குளித்து, மகாவிஷ்ணுவை பூஜிக்க வேண்டும்.  பெருமாள் ஆலயங்களில் நடைபெரும் வழிபாட்டு வைபவங்களை தரிசிப்பது சிறப்பு. அன்று இரவு முழுவதும் கண்விழித்து புராண நூல்களைப் படிப்பதும், பகவான் நாமங்களைச் சொல்வதுமாக
இருக்க வேண்டும்.

ஏகாதசி மறுநாள் - துவாதசி.  அன்று உணவு அருந்துவதை பாரணை என்பர்.  துவாதசி அன்று அதிகாலையில் நீராடி, இறைவனைப் பிரார்த்தித்த பிறகு, உப்பு-புளிப்பு இல்லாத உணவை ஆல்- இலையில் பரிமாறி....சுண்டைக்காய், நெல்லிக்கனி, அகத்திக்கீரை சேர்த்து....பற்களில் படாமல், " கோவிந்தா  கோவிந்தா" என்று மூன்று முறை கூறி சாப்பிட்டு விரதத்தை முடிக்க வேண்டும்.  நாம் சாப்பிடுமுன் பெரியோருக்கும் வறியவருக்கும் உணவு வழங்க வேண்டும்.  துவாதசி அன்று பகலில் தூங்கக் கூடாது.  குழந்தைகள்,
வயதானவர்கள் நோயாளிகளுக்கு உணவு விஷயத்தில் விலக்கு என்கிறது சாஸ்திரம்

"வைகுண்ட் ஏகாதசி 2010 " Video இதோ உங்களுக்காக [Courtesy:ShanguChakra]


http://www.youtube.com/watch?v=8eP2X7_RmGI





30 November 2010

Ayyappan Temple Sabarimala - Kerala

Swamiye Saranam Ayyappa

Om Swamiye! Saranam Ayyappa! Om Hariha Sudhane! Saranam Ayyappa! Om Annadhana Prabhuve! Saranam Ayyappa! Om Dharma Saasthave! Saranam Ayyappa!



Swamy Ayyappa Temple, Sabarimala, Kerala

Sabarimala Ayyappa temple , the hill shrine in Kerala, the south end state of India was opened for the two- month old annual festival on November 15th. Millions of pilgrims across the world visit this shrine during this short period to offer their prayers. This is the one and only unique temple of this kind in the world. The uniqueness is that though the rituals are that of the ones attached to the Hindu religion the temple is open to people of all faiths. Apart from that in front of the temple in a small enclosure a Muslim mythical character is also worshiped by the pilgrims before they offer prayers at the sanctum sanctorum of Swami Ayyappa temple.


Sabarimala Ayyappa Temple is a renowned pilgrim centre atop the rugged hills of the Western Ghats. This holy shrine is dedicated to Lord Ayyappa, situated in middle of the Reserve Forest area in Perinad village, Ranni Taluk, Pathanamthitta District, Kerala. Ayyappa temple is surrounded by valley with a green forest hills. Sabarimala is named after Shabari. For Shabari’s devotion and faith during her penance, Lord Rama who accepted her wish. Sabarimala is about 4135 feet above sea level is thronged by millions of devotees with prayers and chanting Ayyappa name with high volume. The pilgrimage to Sabarimala Sri Dharmasasta Temple is most famous and prominent among all the Sastha Temples.  This temple stands as an example for communal harmony.


Dharmasasta


Ayyappa devotees believed that “Parasurama Maharshi” from sea, troughed his axe, than the idol of Ayyappa was installed at Sabarimala. The devotees not only from southern India and also from different parts of the country and abroad visit here in the months of November and at the end of January. Temple is opens to people of all faiths and different non-hindus pilgrimages to this temple. The existence of the “Vavar Nada” is honor of a Muslim saint is near to the main Ayyappa Swamy temple by the side of Holy Pathinettampady at Sabarimala.  Pilgrims also offer prayers in the mosque at Vermeil. An significant aspect in Ayyappa pilgrimage is addressing each other as AYYAPPA  whether rich or poor, learned or illiterate, master or servant are all equal before LORD AYYAPPA.  


Pilgrims at the Pamba River
Pamba River is the spot on the way to Sabarimala Temple. Devotees take a holy bath and prayers here and move towards the Neelimala Hill. After a 7.5 kms walk up the Neelimala Hill is the holy Lord Ayyappan Temple.

In the front side for mounting to the main temple of Sree Dharma Shastha pilgrims reach the Pathinettampadi, the holy eighteen steps. This eighteen steps is permitted to climb, only who carry Irumudi Kettu. Other pilgrims must make their entry to the temple on the rare side only.
Irumudi Kattu
The pilgrimage begins in the month of November and ends in January. The temple attracts pilgrims not only from the southern states of India, but also from other parts of the country and abroad. The shrine gets thronged with devotees especially during the main pilgrim season from November to January. Mandala pooja [November16,2009] and Makaravilakku[Jan.14th] are the two main events of the pilgrim season. The temple stays closed during the rest of the year except for the first five days of every Malayalam month and during Vishu [April]. 
Certain customs are to be strictly observed if one has to undertake a pilgrimage to Sabarimala. A pilgrim attending the Mandalapooja should observe austerities for 41 days. During this period, the pilgrim should abstain himself from non vegetarian food and carnal pleasures. Pilgrims set out in groups under a leader, and each carry a cloth bundle called Irumudi kettu containing traditional offerings. Unlike certain Hindu temples, Sabarimala temple has no restrictions of caste or creed. The temple is open to males of all age groups and to women who have either passed their fertility age and those before reaching the stage of puberty. The easiest route is via Chalakkayam, by which one can reach the banks of the river Pamba by vehicle. Pamba is the main halting point on the way to Sabarimala. From here one has to trek 4 to 5 kms to reach the temple.

THE HISTORY
AYYAPPAN know as AYYAN who belonged to the Vellalar Kulam, was the army chief of the Pandalam royal family. He lived with his uncle Perisseri Pillai of Erumeli, Kottayam dist, Kerala. This was about ten generations ago.
Ayyan was instrumental in the defeat of Udayanan, who attacked Sabarimala and tried to demolish the ancient Sastha temple in the thick forest of present Pathanamthitta district.

Swamy Ayyappan
Meanwhile the Royal family of King Pandya had migrated from Tamilnadu about 800 years back. The King reconstructed the destroyed Sastha temple at Sabarimala with the help of Ayyan, Vavar, a Muslim youth from Kanjirappally, Kadutha, a Nair youth from Muzhukeer, Chenganoor, Alapuzha dist.
During a clash, Ayyappan got killed. His uncle,Perissery Pillai, constructed the KOCHAMPALAM - an old small Sastha temple - at Erumeli, opposite the VAVAR PALLY[(MOSQUE], constructed by Muslims in memory of Vavar swamy.
After the demise of Ayyappan people thought that he was the avathar of Lord Sasthaand began to worship him. Later Ayyappan and Sastha became synonymous.
Some say that Ayyappan was the son of a Brahmin but Nalankal Krishna Pillai in his book "Mahashekthrangalkkumunpil" states that Brahmins never had the name AYYAPPAN or AYYAN.
In the age old "Elavarsevampattu" it was clearly mentioned that Ayyan belonged to "Vellalar kulam, Near Erumeli, Kottayam, Kerala.There still exists a vellala house called Puthenveedu in Erumely. In the same compound there is a 300 year old, thatched, depleted, mud house, the house of Perissery Pillai, Ayyappan's uncle and the Vellal Chieftain of Erumeli. There even today one can see the ancient sword used by Ayyappan to kill the monstrous ERUMA- mahisham. The place where the "eruma" was killed became Erumakolly and later Erumeli.
Pilgrims at Sabarimala Temple
Sabarimala pilgrimers ,Ayyappans, conduct the Erumeli PETTAITHULLAL [Pettatullal is painting the face with colours and dancing with wooden weapons to make one look odd. The essence of this practice is to give up ones ego and surrender to Lord Ayyappa.] This is to commemmorate the killing of mahisham by Ayyan and is celelebrated during the month of December-January every year. "Ayyan / Ayyappan" Pillai is very common name among vellalas of Kottayam, Alapuzha, Pathanamthitta, Idukki and Ernakulam districts of Kerala. A number of Ayyappan kovils were constructed by Vellalas who migrated from Tamilnadu to Kerala e.g. Erumeli, Kanam etc.
Lakhs and lakhs of Tamilian Ayyappan devotees called the "Ayyappans" - come to Sabarimala every year to worship Tamil origin "VELLALAR KULA JHATHAN AYYAN AYYAPPAN".







SANNIDHANAM
The layout of the Ayyappa temple is believed to have originated from the specific instructions of the Lord himself, who wanted Malikappurathamma, on his left a few yards from Sannidhanam, and his trusted lieutenants Vavur and Kadutha to be positioned as his guards at the foot of the holy 18 steps. The pilgrims worship in this place also. This exemplifies the unique feature of the temple. The temple is open to all faiths. The divine qualities like equality, fraternity, tolerance, humanity etc.. are shining well in the pilgrims.
Ayyappa cult gives much importance for the secularism and communal harmony and has turned out to be a model for the whole world. Another significant aspect of the pilgrimage is that all the pilgrims whether rich or poor, learned or illiterate holding position or not master or servant are all equal before LORD AYYAPPA and all address each other as AYYAPPA.
The pilgrims on their sojourn to Sabarimala worship at Erumeli Sree Dharma Sastha Temple and conduct "Petta Thullal". They also worship in the mosque at Erumeli as a part of their pilgrimage.
According to legend, the temple of Sabarimala and the deity of Ayyappa have always been regarded as the Pandalam Raja's very own. So permission from the King has to be attained before proceeding to the temple. To make it easy for pilgrims to obtain the necessary permission, a representative of the king sits with all the royal insignia, on a raised platform at the base of the Neelimala Hill. The pilgrims offer a token amount (not necessary) to the royal representative, and receive vibhuti from him.
This marks the beginning of the steepest climb of the pilgrimage, the 3 km trek up the majestic Neelimala Hill, atop which sits Lord Ayyappa in all his glory. The pilgrims wind their way up the difficult trail in an unending stream, the hill reverberating with the constant chanting of thousands.
At the first sight of the Patinettampadi, the holy eighteen steps, a full throated cry goes up from the devotees, "Swamiye Saranam Ayyappa!" It is the realisation of a mission.
The shrine of Lord Ganapati: To the south-west of the main temple is the shrine of Lord Ganapati, known as Kannimula Ganapati. The special offering to this deity is Ganapati homan.
Homakunda: There used to be a large homakunda in front of the shrine, which burned constantly, fed by the coconut shells thrown by the devotees, after offering the ghee. As the coconut shells gets consumed by the fire, the sins of the devotees are believed to be cleansed. Due to the growing crowds in the temple, the homakunda has now been shifted to a location below the temple.
Bhasma Kulam: About a 100 metres away is the shrine of Malikappurathamma. En route to the shrine is the temple tank, Bhasma Kulam, in which hundreds of devotees take a holy bath in memory of the tapaswini Sabari who entered a fire to end her mortal life. It is after her that the peak is named Sabarimala.On account of the number of people who bathe in the tank, the water is frequently drained out and refilled with fresh water.
Malikappurathamma: Situated on a small hillock, the Malikappurathamma temple houses the shrines of the Devi and Kaduthaswamy. Devotees also worship a trident and lamp here, and offer coconuts. The coconuts are not broken, however, but are just rolled on the ground .
To the left of this temple are the shrines of the snake god and goddess, Nagaraja and Nagayakshi. Here, tribals beat on drums, play stringed instruments and sing sarppa pattu to protect devotees and their progeny from the harmful effects of snakebites.
Shrines of Kaduthaswamy and Karuppaswamy: At the foot of the Patinettampadi are the two shrines of Kaduthaswamy and Karuppaswamy, who stand like dwarapalakas or guardians of the holy steps, to ensure that they are not polluted by those who tread on them without fulfilling the rigid austerities required of them. They are also believed to protect the devotees from the evil spirits of the forests.
According to legend, Kadutha was a great warrior who helped the Pandalam king defeat the armies of Udayanan and other enemies. When the king came to Sabarimalai to reconstruct the temple, Kadutha came with him to protect him. Ultimately, he became so attached to Ayyappa that he decided to spend the rest of his days with his Lord.
Also near the Patinettampadi is the shrine of the Muslim Vavurswami. While there are several accounts of identity of Vavur, it is generally believed that he was a warrior who was defeated and subdued by Ayyappa, and later became a close associate. It is believed that Lord Ayyappa himself instructed the Pandalam king to build a mosque for Vavur at Erumeli and a shrine at Sabarimalai.


Renovations Done:
Golden 18 Steps: 

18 Golden Steps


Built on a plateau about 40 feet high, the Ayyappan temple commands a lofty view of the mountains and valeys all around.  The ancient temple has been rebuilt after a fire in 1950, consisting of a sanctum sanctorum with a copper-plated roof and four golden finials at the top, two mandapams, the belikalpura which houses the alter and the flag-staff.  Replacing the earlier stone image of the deity is a beautiful idol of Ayyappa in panchaloha, an alloy of five metals, aboout one and a half feet.  




The original granite steps were badly damaged due to continuous breaking of coconuts on the steps by pilgrims climbing the steps. The Devasom Board with the approval of Lord Ayyappan through a devaprasanam, covered the steps with panchaloka. The work was completed by 15th November 1985. Later on these steps were covered with gold.

Several myths persist regarding the significance of the Pathinettu thripadikal or the 18 holy steps, but almost all of them stress the importance of the number, 18. According to a popular belief, the first 5 steps signify the five indriyas or the senses [eyes, ears, nose, tongue and skin], the following 8 the ragas [tatwa, kama, krodha, moha, lobha, madha, matsraya, and ahamkara], the next 3 the gunas [satwa, rajas and thamas] followed by vidya and avidya. Climbing these would take the devotee closer to self-realisation. The act of crossing the 18 steps is so sacred that nobody can mount them without undertaking the rigorous 41 day fast and carrying the irumudi. It is also widely assumed that the pathinettu padikal symbolize the 18 puranas; others believe that they connote the 18 weapons with which Lord Ayyappan obliterated evil. An Ayyappa devotee crosses the Pathinettaam padi only twice during his sojourn on Sabarimala - for entering the temple and to go downhill. Before ascending or descending the steps, pilgrims break coconut as an offering to the steps. One needs to have the sacred Irumudi on head while going up or down the 18 steps and while descending the steps the devotees climb down backwards facing the sanctum sanctorum.


MAKARAJYOTHI

The most important event at Sabarimala is the Makara Jyothi [usually on January 14th]. Thiruvabharanam or the sacred jewels of the Lord [presented by the Pandalam king] arrives at Sabarimala in three boxes. On the arrival of the jewel boxes the whole mountain reverberates to the chanting of 'Saranam Ayyappa' by millions of devotees gathered there to watch the event.

The Thiruvabharanam box - still the private property of the Pandalam royal family, starts its journey two days before Makara Jyothi day from Pandalam. The person who carries the box dances in a peculiar trance. Thiruvabharanam travels through Valiakoikkal Sastha temple at Pandalam, Ayiroor Puthia Kavu Temple, Perunattil temple, Vlakkai, Nilaikkal Siva temple, Vellachimala, Pamba and Sabari Peedam before reaching at Sannidhanam around 6.00 PM on the Makara Jyothi day. Every year a Garuda hovers and flies above the Thiruvabharanam boxes as if to guard them.

On reaching the Sannidhanam the Melshanthi and Thandhri receive the sacred jewels amidst the thundering echoes of Sarana ghosham.
The Thiruvabharanam box contains a diamond crown, golden bracelets, necklaces and a sword. The priests adorn the Lord with these and perform arathi.
At the same moment a brilliant light of amazing magnificence appears in the northeastern side to the temple at the opposite mountain in a place called Kantamala [the home of devas and rishis]. It is believed that this brilliant flame of light is the arathi performed by the rishis and the devas. This event marks the culmination of the pilgrimage to Sabarimala.




Makara Vilakku festival:


After the jyothi, that night Malikappurathuamma, mounted on an elephant comes in a procession to the Patinettampadi [18 steps ] and returns back to her abode. This is the beginning of the Makara Vilakku festival.This festival lasts for seven days. Many pilgrims stay back till this festival is over and Kuruthi pooja [offering of water mixed with chunnambu and turmeric powder to the forest deities] is performed.
Even some who leave Sabarimala after witnessing the Jothi observe fasting till the Makara Villaku and Kuruthi pooja is complete at Sabarimala.

MakaraVilakku Festival opens



Other festivals :


Onam, Mandalapooja, Pankuni Uthram [Lord’s Birthday] and Vishu are the other festivals celebrated at Sabarimala with pomp and glory.



Sabarimala Temple Visiting Period
The main pilgrimage season start from Mandala Pooja [November] and Makaravilakku [January] every year.  The temple closes for five days after Mandala Puja, to re-opening for the Makaravilakku Mahotsavam. During the Malayalam month of Chingam and Vishnu, Pilgrims also visit in large numbers to the temple for Onam. For Darshan Sabarimala Temple opens at 4:00 am and is closes between 1:30 pm to 5:30pm for afternoon puja. Again it is opened at 5:30 pm and closed at 11:00 pm, after Harivarasanam Song.


Route to Sabarimala

Routes to Sabarimala Temple
Mainly three routes to Sabarimala Ayyappa Temple – The Erumeli route from Tamilnadu travel via Kottayam – Kumali [KK] road is the most difficult one to cover about 61 km on foot through forest and hill track.  On reaching Vandiperiyar, they turn to Uppupara which is easy to walk of 6 kms to Sabarimala. The Chalakayam route is near Pampa River and the temple is only 8 kms to Sabarimala. The Chalakayam route is the easiest among all other routes.
Sabarimala Ayyappan


How to reach Sabarimala Temple in Kerala
For Sabarimala pilgrims to Kerala, the Southern Railways and State Bus Transport corporations operate special trains and buses for the convenience  of the  pilgrims,  between November and January pilgrimage season.
By Air
The  nearest airports to Sabarimala Ayyappa Temple, is 78km from Cochin International Airport at Nedumbassery, Ernakulam and 150km from Trivandrum International Airport at Thiruvananthapuram.
By Rail
Chengannur Railway Station, Thiruvalla Railway Station and Changanacherry Railway Station are the nearest railway stations to reach Sabarimala Temple.
 Adiyen therindum theriyaamalum seidha sakala kutrangalaiyum poruttu kaattu rakshittu arula vendum, Shree satyamaana ponnu patinettam padimel vaazhum en om Shree Harihara sutan kaliyugavaradan aananda chittan ayyan Ayyappa Swamiye Saranam Ayyappa!!
Related Posts with Thumbnails