பொங்கல் வாழ்த்துக்கள்.
பொங்கல் விழா சில இடங்களில் நான்கு நாள் கொண்டாட்டம் ஆகும்
இந்தத் திருநாளைப்பற்றி இதோ உங்களுக்காக...
சூரியன் மகர ராசியில் அதாவது பூ மத்ய ரேகையிலிருந்து வடக்குப் ப்க்கம் போக ஆரம்பிக்கும் முதன் நாள் நமது பொங்கல் திருநாள் இதை சஸ்கிருதத்தில் உத்தராயணம் என்பார்கள் மஹா பாரதப் போரில் பாண்டவ்ர்களின் பாட்டனாரான திரு பீஷ்மர் துரியோதனின் பக்கம் இருந்தவர் அவர் மேல் சண்டையின் போது அம்புப் பட்டு கீழே விழுந்தார் ஆனால் அவர் உத்தராயணத்தில் தன் உயிரை நீக்க எண்ணி முள்ப்டுக்கையில் உயிரைப் பிடித்துக் கொண்டு படுத்திருந்தார் பின் இந்த சங்கராந்தியின் போது உயிர் நீத்தார். அவ்வளவு புண்ணியக் காலம் இது மிகச் சிறந்த நாள்.
இந்தியா விவசாயத்தை முக்கியமாகக்கொண்ட நாடு. எல்லா பசுமைக்கும் காரணம் சூரிய வெளிச்சம் சூரிய வெப்பத்தினால் தான் செடிகள் வளருகின்றன ஆகையால் விவசாயிகள் நன்குப் பயிர் வளர்ந்துப் பறிக்கத்தயாரான நிலையில் முதல் சாகுபடியைத் தங்கள் கடவுளுக்கும் சூரிய பகவானுக்கும் படைக்கிறார்கள் இதுவே பொங்கல் திருநாள், அன்று விடிக்காலையில் குளித்து புது உடைகளையும் உடுத்தி சர்க்கரைப் பொங்கல் செய்து சூரியனுக்குப் படைக்கிறார்கள் இன்று ஆதித்ய ஹிருதயம் என்ற ஸ்லோகம் சொன்னால் மிக்வும் நல்லது பாலுடன் வெல்லமும் கலந்து அரிசியையும் போட்டுப் பின் கொதித்துப் பொங்கும் நேரம் வீட்டில் எல்லோரும் பொங்கலோப் பொங்கல் என்று மகிழ்ச்சியுடன் கூவி ஆனந்தம் அடைக்கிறார்கள் அந்தப் பொங்கல் பானையின் மேல் மஞ்சளின் இலை, கிழங்கும் சுற்றி மஞ்சள் குங்குமம் இட்டு வைப்பார்கள்.
போகி தமிழ் ஆண்டின் மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று கொண்டாடப்படுகிறது. பொங்கல் திருநாளின் முதல்நாள் கொண்டாடப்படுகிறது. இதுநாள் 'பழையன கழித்து, புதியன புகவிடும்' நாளாகக் கருதப்படுகிறது. பழையவற்றையும், உபயோகமற்றவையும் விட்டெறியும் நாளாகக் கருதப்படுகிறது. பழந்துயரங்களை அழிப்பதான இப்பண்டிகையைப் "போக்கி' என்றனர். அந்தச் சொல் நாளடைவில் மருவி "போகி' என்றாகிவிட்டது. அக்கால வழக்கப்படி வருடத்தின் கடைசிநாள் என்பதால் நடந்து முடிந்த நல் நிகழ்வுகளுக்கு நன்றி கூறும் நாள் போகி என்போரும் உண்டு. கடந்த வருடத்திற்கு நன்றி சொல்லும் நாள் போகிப்பண்டிகை.
போகிப்பண்டிகை.
|
அன்றைய தினம், வீட்டில் தேங்கிப் போயிருக்கும் குப்பைகள் தேவையற்றபொருட்களை அப்புறப்படுத்தப்பட்டு வீடு சுத்தமாக்கப்படும். வீடு மட்டுமல்ல மனதில் இருக்கும் தீய எண்ணங்களும், தவறான எண்ணங்களும் நீக்கப்படவேண்டும் என்பது இதில் உள்ள தத்துவமாகும்.
இதையொட்டியே பொங்கலுக்கு முன் வீட்டிற்கு புது வர்ணம் பூசி வீட்டை அழகு படுத்துகிறார்கள். பொங்கல் சமயத்தில் வீடு புதுப் பொலிவுடன் காணப்படும். இது கிராமங்களில் பொங்கல் சமயத்தில் காணக் கிடைக்கும் இனிய காட்சியாகும்.
இல்லம் தோறும் போகி அன்று, வைகறையில் 'நிலைப்பொங்கல்' நிகழ்வுறும். வீட்டின் முன்வாயில் நிலைக்குப் மஞ்சள் பூசி, திலகமிட்டு, தோகை விரிந்த கரும்பொன்றைச் சாத்தி நிற்கச் செய்து வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு, குங்குமம் வைத்து, தேங்காய் உடைத்து, கர்ப்பூரம் காட்டி இல்லுறை தெய்வத்தை வணங்குவர். சிறு மணித்துளிகளில் இது முடிவுறும். இதைக் குடும்பத்தலைவி நடத்துவார்.
போகிப் பண்டிகையின் போது போளி, வடை, பாயசம் போன்றவை இறைவனுக்கு நிவேதனம் செய்யப்படும்
தைப்பொங்கல் தை 1அன்று தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. தமிழர் திருநாளாக தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆபிரிக்கா, மொரிசியஸ், என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. இவ்விழா சமயங்கள் கடந்து அனேக தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாக கொண்டாடப்படுகிறது.
தைப்பொங்கல் வரலாறு:
சங்ககாலத்தில் அறுவடை காலத்தில் நலல் மழை பெய்யவும், நாடு செழிக்கவும் பெண்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடித்தார்கள். தை முதல் தினத்தில் இந்த விரதத்தை முடிப்பார்கள். நல்ல விளைச்சல் கொடுத்தமைக்காக பூமி, சூரியன், உதவிய மாடு போன்றவற்றிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபட்டனர். இதுவே நாளடைவில் மூன்று தினங்கள் கொண்டாடும் பொங்கல் திருநாள் கொண்டாட்டமாக மாறியது.
தைப்பொங்கலுக்கு சில நாட்களுக்கு முன்னரே கொண்டாட்ட வெடிகள் வெடிக்க தொடங்கி விடும். பொங்கலுக்கு தேவையான பொருட்களை ஆயத்தப்படுத்திக் கொள்வர். .
பொங்கலோ பொங்கல்
|
பொங்கலன்று அதிகாலை எழுந்து முழுகுவர். வீட்டு முற்றத்தில் கோலம் இட்டு அதன் நடுவில் பானை வைப்பர்.புதுப்பானையில் புது அரிசியிட்டு முற்றத்தில் பொங்க வைப்பார்கள். புதிய பானைக்கு புதிய மஞ்சளைக் காப்பாக அணிவர். புதிய மஞ்சள் கொத்தையும் புதிய கரும்பையும் புதிய காய்கறிகளையும் அன்று பயன்படுத்துவர். முற்றத்திற்கோலம் தலை வாழையிலையில் நிறைகுடம் வைத்து விளக்கேற்றி கதிரவனை வணங்கி பொங்கலிடத் தொடங்குவர். இந்துத் தமிழர்கள், சாணத்தில் பிள்ளையார் பிடித்தும் வைப்பார்கள். பொங்கல் பொங்கி வரும் வேளையில் குடும்பத் தலைவன், மனைவி மக்களுடன் கூடி நின்று "பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்!" என்று உரக்கக் கூவி அரிசியை இருகைகளாலும் அள்ளிப் பானையில் இடுவர். தனது முதற் பயனை கதிரவனுக்குப் படைத்துப் பின் குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் கொடுத்த பின்பே தான் நுகர்வான். இது தமிழரின் பண்பாடாக தொன்று தொட்டு உள்ளது என்பர் .
இதன் முதல் நாள் போகி என்று வீட்டைச் சுத்தம் செய்து வெளிக்குப்பைகளையும் சேர்த்து எரிக்கிறார்கள் அதாவது நம் ம்னம் அழுக்கில்லாமல் நாமும் கெட்டப் பழக்கங்களை எரித்துவிடவேண்டும்.
கனு பொங்கல்:
பொங்கல் மறுநாள்" கனு" என்றுச்சொல்லும் திருநாள் அன்று சகோதரிகள் தங்கள் சகோதரர்களுக்காக் அவர் நலதிற்காக பிரார்த்தனைச் செய்கிறார்கள்,அதற்கு சாத உருண்டைகளை மஞ்சள் குங்குமத்துடன் பிசைந்து உருட்டி பின் ஒரு மஞ்சல் கொத்து இலையில் வெளியில் வைக்க, அது காக்காய் குருவிகளுக்கு ஆகாரம் ஆகிறது.
இரண்டுமஞ்சள் இலைகளை அல்லது வாழை இலைகளை கிழக்குமுகமாய் ஆற்றங்கரையிலோ அல்லது வீட்டு மொட்டைமாடியிலோ கோலமிட்டு அதன்மீது வைக்கவேண்டும்.
முதல்நாள் பொங்கிய சாதத்தில் மஞ்சள்பொடிதூவி மஞ்சள்சாதம் கொஞ்சம், குங்குமம் கலந்த சிவப்பு சாதம் கொஞ்சம், வெள்ளையாய் பால்சாதம் கொஞ்சம், வெல்லம் சேர்த்த சக்கரைப்பொங்கல் கொஞ்சம் லேசாய் தயிர் சேர்த்த தயிர்சாதம் என 5வகை அன்னங்களை தயாரிக்கவேண்டும்,ஒவ்வொன்றிலும் 5அல்லது 7பிடி எடுத்து இலைமீது வரிசையாய் வைக்கும்போது,
கனு பிடி[In my house] |
.....காக்கா பிடி வைத்தேன், கனு பிடி வைத்தேன், காக்காய்க்கும் குருவிக்கும் கல்யாணம் காக்கா பிடி வைத்தேன், கனு பிடி வைத்தேன், கண்டவர்க்கெல்லாம் சந்தோஷம்...காக்காய்க்கூட்டம் போல எங்கள் கூட்டம் கலயாமல் இருக்கனும்"
என்று சொல்லிக்கொண்டே வைக்கவேண்டும். தீபம் ஏற்றிவிட்டு ஆரத்தி கரைத்து ஆற்றில் விடவேண்டும்.. வீட்டிலென்றால் வாசலில் கொட்டவேண்டும்.
உடன் பிறந்தவர்கள் உள்ளூரில் இருந்தால் அழைத்து கலந்த சாதம் பாயசம் செய்து விருந்து போடவேண்டும். அவர்கள் தரும் அன்பளிப்பை பெற்றுக்கொள்ள வேண்டும். சகோதரிகளையும் உடன்பிறந்தவர்கள் காலை அழைத்து விருந்து வைப்பார்கள். அனைவரும் அன்று குடும்பத்தில் ஒன்றுகூடி காணப்படுவதால் இது காணும் பொங்கல் ஆகி இருக்கலாம்!
கனு பொங்கல் கொஞ்சம் விசேஷமானது. கனு பொங்கல் என்று சகோதரர்கள், சகோதரிகளுக்கு ஏதாவது தர வேண்டும். என் அத்தைகளுக்கு அவர் சகோதரர் [என் மாமனார்] சில வருடங்களுக்கு முன்பு இறக்கும் வரை பணம் அனுப்பிக் கொண்டு இருந்தார். சில பத்து ரூபாய் மணியார்டர் வரும். ஆனால் ஞாபகம் வைத்து சகோதரன் அனுப்பவது அவருக்கு மிக சந்தோஷம்!
என் மாமனாரின் ஆசைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், இந்த பழக்க வழகங்களை விட்டுவிடாமல், என் அத்தைக்கு இன்று வரை "கனு"விற்கு பணம் அனுப்பிக்கொண்டுதான் இருக்கிறோம்!
இதனை நான் மிகப் பெருமையுடன் கூறுகிறேன்.
மாட்டுப் பொங்கல் என்பது தைப்பொங்கல் நாளின் மறுநாள் தமிழர்களால் கொண்டாடப் படும் ஒரு பண்டிகை ஆகும். இது பட்டிப் பொங்கல் அல்லது கன்றுப் பொங்கல் எனவும் அழைக்கப்படுகிறது. மக்களின் வாழ்வில் ஒன்றிய பசுவுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும், பசுக்களில் எல்லாத் தேவர்களும் இருப்பதாலும் பசுக்கலை வணங்கி வழிபடும் நாளாகக் கொண்டாடுகின்றனர்.
மாட்டுப் பொங்கல்
|
அன்று மாடுகள் கட்டும் தொழுவத்தினைச் சுத்தம் செய்து கொள்வார்கள். கால்நடைகளை குளிப்பாட்டி சுத்தம் செய்வார்கள். மாடுகளின் கொம்புகள் சீவப்பட்டு பளபளக்கும் வகையில் வண்ணம் பூசி, கூரான கொம்பில் குஞ்சம் அல்லது சலங்கை கட்டிவிடுவார்கள். கழுத்துக்கு தோலிலான வார் பட்டையில் ஜல், ஜல் சலங்கை கட்டி அழகு படுத்துவார்கள். திருநீறு பூசி குங்குமப் பொட்டிட்டும் புதிய மூக்கணாங் கயிறு, தாம்புக் கயிறு அணிவித்தும் தயார் செய்வார்கள்.
மாட்டுப் பொங்கல்
|
உழவுக்கருவிகளை சுத்தம் செய்து சந்தனம், குங்குமம் வைப்பார்கள். விவசாயத்தில் பயன் படுத்தப்படும் அனைத்து கருவிகளையும் இதேபோல செய்வார்கள். தாம்பாளத் தட்டுகளில் தோட்டம் காடுகளில் விளைந்த பயிர், பச்சைகளை வைத்தும் தேங்காய், பூ, பழம், நாட்டுச் சர்க்கரை என எல்லாம் பூஜைக்காக எடுத்து வைப்பார்கள். தொழுவத்திலேயே பொங்கல் பொங்கி கற்பூர தீபாராதனை காட்டப்படும். இதன் பின் பசு, காளை, எருமை என அனைத்து கால்நடைகளுக்கும் பொங்கல், பழம் கொடுப்பார்கள்.
ஜல்லிக்கட்டு விளையாட்டு |
இப்போதும் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் காளை பிடிக்கும் ஜல்லிக்கட்டு விளையாட்டு இந்நாளில் நடைபெறும். அதாவது முரட்டுக் காளையையின் கொம்பைப் பிடித்து அடக்க வேண்டும். அதற்குப் பரிசும் உண்டு !
காணும் பொங்கல்
அதற்கு மறு நாள் காணும் பொங்கலில் ஊர் சுற்றி கூட்டமாக் பீச், சினிமா என்றுப் பிக்னிக் வைத்துக் கொண்டு மகிழ்வார்கள். ஒவ்வொரு வருடமும் காணும் பொங்கல் அன்று மக்கள் பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு தங்கள் குடும்பத்தினருடன் சென்று கண்டுகளிப்பார்கள். அந்த வகையில் இந்த வருடமும் காணும் பொங்கல் அன்று பல்வேறு சுற்றுலா தளங்களில் மக்கள் கூட்டம் அலைமோதும்.
காணும் பொங்கலுக்கு கட்டாயம் பொருட்காட்சி செல்வார்கள். சிலர் கடைகளுக்கு செல்வார்கள். வியாபாரிகளுக்கும் கொண்ட்டாட்டம் தான்!
காணும் பொங்கல்
|
பொங்கல் பண்டிகையின் 4வது நாள் அன்று காணும் பொங்கல் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. வழக்கம் போல சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் உள்ள மக்கள், சென்னை கடற்கரை, கிண்டி சிறுவர் பூங்கா, வள்ளுவர் கோட்டம் உள்பட பல்வேறு இடங்களில் குடும்பத்துடன் குவிந்த வண்ணம் இருப்பார்கள்.
காணும் பொங்கலை முன்னிட்டு , ஒவ்வொரு வருடமும் மக்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகளை தமிழக அரசு ஏற்பாடு செய்கிறது.
பொங்கல் பண்டிகை - கோலம் |
Very good compilation !! very informative
ReplyDeleteDear Mr. Karthikeyan Pandian,
ReplyDeleteTks for your comments. It sure is very encouraging.
Lalitha Ramachandran