Girivara vindhya sirodhi nivasini,
Vishnu Vilasini Jishnu nuthe,
Bhagawathi hey sithi kanda kudumbini,
Bhoori kudumbini bhoori kruthe,
Jaya Jaya hey Mahishasura mardini,
Ramya kapardini, shaila Suthe. 1
Lord Muruga as Arumuga with Valli and Devasena at Thiruthani Temple |
You may also watch the 3 Videos I have put her at the end of the posting, on Goddess Mahishasura Marthini.
மத்தூர் ஸ்ரீமஹிஷாசுரமர்தினி அம்மன் ஸ்தல வரலாறு.
உலகங்கள் யாவற்றையும் கடைக்கண் அருட்பார்வையினால் காக்கின்ற தெய்வம் அம்பிகை. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி வட்டம், மத்தூர் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் "மஹிஷாசுரமர்தினி அம்மன்".
பூமியில் இருந்து வெளிப்பட்டு சுமார் 45 ஆண்டுகளாகின்றன. இத்திருத்தலம் 64 சக்தி பீடங்களுக்கு இணையாக வைத்துப் போற்றப்படுகிறது.
மத்தூர் எல்லையில் 1964 ஆம் ஆண்டு அரக்கோணம் - ரேணிகுண்டா இரண்டாவது இருப்பு பாதை போடும் பணி நடைப்பெற்றபோது சக்திமேடு என்ற இடத்தில் கூலியாட்கள் கடப்பாறையால் மண்ணைப் பெயர்த்தார்கள். ஒரு கூலியான் கடப்பாறையால் பூமியைக் குத்தும்போது "டங்" என்று வெங்கல சப்தம் கேட்டது. அந்த கூலியான் வெங்கல் தெய்வ அருளால் மயக்கமடைந்தான். கூட்டம் கூடி மண்ணை அகற்றினர். அப்போதுதான் அந்த அதிசயம் கழ்ந்தது. அன்னை மலற்ந்த முகத்தோடு, எட்டு கரங்களுடன்
கம்பீரமான திரு உருவத்தோடு பூமியில் இருந்து நம்மை காக்க எழுந்தருளினாள்.
மத்தூர் ஸ்ரீ மஹிஷாசுரமர்தினி அம்மன் திருக்கோயில் |
அன்னை மஹிஷாசுரமர்தினி பல ஆண்டுகளாக பூமிக்குள் இருந்த போது அந்தபகுதி "சக்திமேடு" என்று பெயர் பெற்று விளங்கியது. இங்கு உச்சிப்பொழுதில, இரவு நேரத்திலோ வருபவர்களை அன்னை தனது மகா சக்தியால் மூர்சையுறச் செய்து வந்தாள். அன்னையின் திருவுருவம் புதைந்து கிடக்கும் இரகசியம் தெரியாமல் மக்களிடத்தில் ஒருவித பயபக்தி நிலவி வந்தது. அன்னையின் திருவுருவம் வெளிப்பட்ட பின் இன்றுவரை இதுபோன்ற நிகழ்ச்சிகள் இங்கு நிகழ்வதில்லை.
இக்கோயிலின் ஸ்தல விருட்ஷம் - வேப்ப மரம் |
வேப்பிலை மகத்துவம்
அம்மனுக்கு நேர் எதிரே உள்ள வேப்ப மரம் இக் கோயிலின் ஸ்தல விருட்ஷமாகும். அம்மனின் அருள் நிறைந்த இந்த வேப்ப மரத்தின் வேப்பிலை கசப்பதில்லை. ஸ்ரீ மகிஷாசுரமர்த்தினி அன்னை இந்த வேபப
மரத்தின் வேப்ப இலையில் உள்ள கசப்பை தான் ஈர்த்துக் கொண்டாள். இது போலவே தான் ஏற்றுக்கொண்டு அனைவருக்கும் நல்லருள் வழங்குகின்றாள். ஸ்தல விருட்ஷமான வேப்பமரத்தின் வேப்பிலை பிரசாதத்தை உண்டு சகல சௌபாக்கியங்களையும் பெருவோமாக. அன்னை ஸ்ரீ மகிஷாசுரமர்த்தினி சாந்த சொரூபினியாகவும், மலர்ந்த முகத்தோடும் மூலவராக வீற்றிருப்பது இக்கோயிலின் தனிச்சிறப்பாகும்.
மகிடாசுரனும் மத்தூர் மஹிஷாசுரமர்தினி அம்மனும் |
மகிடாசுரனும் மத்தூர் மஹிஷாசுரமர்தினி அம்மனும்
எருமையின் வடிவம் கொண்ட [மகிடம் எருமை] மகிஷன் என்னும் அரசன் பல காலம் பிரம்மாவை நோக்கி தவமிருந்து பல்வேறு வரங்களுடன் ஒரு பெண்ணால் மட்டும் எனக்கு மரணம் வரலாம், வேறு யாராலும் எனக்கு மரணம் விளையக்கூடாது என்று வரம் பெற்றிருந்தான். பெற்ற வரத்தால் தேவர்களை வாட்டி வதைத்து வந்தான். தேவர்கள் அத்த அசுரனை அழித்து தங்களைக் காக்க எலலாம் வல்ல அம்பிகையின் அருளை பெற வணங்கி வேண்டினார்கள். மகிடாசுரனை வதைக்க தேவி புறப்பட்டாள். பராசக்தியே தன்னை அழிக்க வந்திருப்பது தெரியாமல் "நீ என்னைத் திருமணம் செய்து கொண்டால் அகில உலகத்திற்கும் தலைவியாகலாம்" என்று பிதற்றினான். அம்பிகை மகிடாசூரனை அழிக்க ஒன்பது நாள் தவமிருந்து பேராற்றலைப்பெற்று ஒன்பதாம் நாள் மகிடாசுரனின் ஆணவத்தை அழித்து அவனுக்கும் அருள் புரிந்தாள். இவ்வாறு தேவர்களுக்கும், உலக மக்களுக்கும் நலம் விளைவித்து மகிடாசுரமர்தினி ஆனாள். அந்த நாட்களையே நாம் " நவராத்திரி" தினமாக கொண்டாடி மகிழ்கிறோம்.
எட்டு கரங்களுடன், சிம்ம வாகனத்தில் வந்த அன்னையின் திருசூலம் அசுரனின் உடன்மீது பட்டதும், அவன் தனது தவறை உணர்ந்து தாயை வணங்கினான். அம்பிகை அவனை மன்னித்து அருள்புரிந்து அவன்மீதே ஆனந்த தாண்டவம் புரிந்தாள். எங்கும் காண்பதற்கரிய இத்திருக்கோலத்துடன் மஹிஷாசுரமர்தினி அம்மன இத்தலத்தில் எழ்ழுந்தருள் புரிகிறாள்.
இத்திருக்கோலத்தை அபிராமி அந்தாதி அருளிய " அபிராமி பட்டர்"
" சுந்தரி எந்தை துணைவி என் பாசத்தொடரை எல்லாம்
வந்து அரி சிந்துர வண்ணத்தினாள், மகிடன் தலைமேல்
அந்தரி நீலி அழியாத கன்னிகை ஆரணத்தோன்
கம் தரி கைத்தலத்தாள் -- மலர்த்தாள் -- என் கருத்தனவே " என்று பாடியுள்ளார்.
அன்னையின் அருள் வடிவம்
எட்டு கரங்களில் சங்கு சக்கரம், வில், மாலை ஆகியவற்றை தரித்து மகிடாசுரனை தனது திருசூலத்தால் குத்தி வென்ற அருட்பார்வையால் உலகினை நோக்கும் சாந்த சொரூபினியாக அன்னை எழுந்தருள் புரிந்து
வருகிறாள். ஏழு அடிக்கும் மேல் நெடிதுயர்ந்து மகிடாசுரனின் தலையின் மேல் அன்னை நடனம்புரியும் காட்சி காண்பவர்களுக்கு பக்திப் பரவசத்தையும் மற்றும் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டி பிரமிப்பையும்
மெய்சிலிர்ப்பையும் ஏற்படுத்தும்.
மகிடாசுரனை தனது திருசூலத்தால் குத்தி வென்ற காட்சி |
கடும் தவம் புரிந்து கிடைப்பதற்கரிய வரங்களைப் பெற்றாலும், பெற்றதன் நோக்கம் நல்லதாக இல்லாவிட்டால் அழிவு நிச்சயம் என்ற உண்மையைத்தான் இந்த மகிடாசுரவதம் விளக்குகிறது. மேலும்,
மகிடன் எனும் அரக்கனை அழித்து அன்னை அவன் தலைமீது திருநடனம் புரிவது போல் உள்ள அன்னையைத் தூய அன்போடும், பக்தியோடும் வழிபடும் அன்பர்களின் வாழ்வில் ஏற்படும் துன்பம் என்னும் அரக்கனை அழித்து, அவர்களின் உள்ளத்தில் அமைதியையும் மன மகிழ்ச்சியையும் ஏற்படுத்துபவளாக அன்னை என்றென்றும் விளங்கி அருள்புரிகிறாள் என்னும் தத்துவத்தை அன்னையின் திருவுருவம் விளக்கி நிற்கிறது.
ஓலைச்சுவடியில் அம்மனின் திருப்பெயர்
பலநூறு ஆண்டுகளுக்கு முன்னால், அகத்தியர், கௌசிகர் போன்ற அருளாளர்களால் எழுதப்பெற்று பாதுகாத்து வரப்படும் ஓலைச்சுவடிகளின் மத்தூர் மஹிஷாசுரமர்தினி அம்மனின் பெயர் பதியப்பட்டு,
உலகமக்களுக்கு ஏற்படும் துன்பங்களுக்கும், அத்துன்பங்களில் இருந்து விடுபட அம்பிகைக்கு செய்ய வேண்டிய நேர்த்திக் கடன்களும் அந்த ஓலைச் சுவடிகளில் பதியப்பட்டிருப்பது நம்மையெல்லாம் அதிசயிக்க வைக்கும் செய்தியாகும். இவ்வாறு வைத்தீஸ்வரன் ஓலைச் சுவடிகளில் மத்தூர் மஹிஷாசுரமர்தினி அம்மனின் திருப்பெயரையும் அம்பிகைக்கு செய்ய வேண்டிய நேர்த்திக் கடனையும் பார்த்துத் தெரிந்து, அன்னையை வழிப்பட்டு, அவளது திருவருளைப் பெற்று வாழ்வில் வளமும் நலமும் பெற்றவர்கள் மிகப் பலர்.
நவகிரஹம் |
ஒவ்வொரு செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் நடத்தப்படும் இராகு கால சிறப்பு அர்ச்சனைகள்:
1. ஒவ்வொரு அம்மாவாசை, பௌர்னமி நாட்களில் நண்பகல் 12.00 மணிக்கு அம்பிகைக்கு நடத்தப்படும் 108 குடம் பால் அபிஷேகம்.
2. பௌர்னமி நாட்களில் இரவில் 9.00 மணி முதல் 11.00 மணி வரை நடத்தப்படும் நவகலச யாக பூஜைகள், 108 சங்காபிஷேகம்.
3. தமிழ் புத்தாண்டு தினத்தன்று நடத்தப்படும் 1008 பால்குட அபிஷேகம், சிறப்பு பூஜையும் மற்றும் ஆங்கில புத்தாண்டு சிறப்பு அபிஷேகமும் பூஜையும், அதன் பின்பு அம்மனுக்கு செய்யப்படும் செம்பு கவச அலங்காரம் பார்க்க பரவசமூட்டும்.
4. நவராத்திரி விழாவில் ஒன்பது நாட்களிலும் நிகழும் சிறப்பு பூஜைகள், சந்தனக் காப்பு, மஞ்சள் காப்பு நடை பெரும். இதனை பார்க்க பரவசமூட்டும். வீபுதி காப்பு, மலர் அலங்காரம், தேங்காய்ப்பூ அலங்காரம் நடை பெரும்.
இக் கோயில் இருக்கும் இடம்
உலகம் போற்றும் சிறப்பும், பெருமையும் மிக்க மத்தூர் அருள்மிகு மஹிஷாசுரமர்தினி அம்மன் ஆலயம், திருத்தணி - திருப்பதி நெடுஞ்சாலையில், திருத்தணியில் இருந்து 8 கி.மீ தூரத்தில் உள்ள பொன்பாடி இரயில் நிலையத்தில் இருந்து மேற்கே சுமார் 2 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. கோயில் முகப்புவரைச்செல்ல திருத்தணியில் இருந்து T71, 97E , 400JJ மற்றும் 97 M ஆகிய எண்கள் கொண்ட பேருந்துகள் தினமும் இயக்கப்படுகின்றன. ம்ற்றும் பொன்பாடியிலிருந்து ஆட்டோக்களும் எந்த நேரமும் இயக்கப்படுகின்றன.
சிறப்புமிக்க இந்த ஆலயத்தில் வளர்ச்சித் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. அன்பர்கள் இயன்று பொருளுதவி புரிந்து அம்பிகையின் அருளுக்கு பாத்திரமாகும்படி இக் கோயில் அதிகாரிகள் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறார்கள்.
நன்கொடை வழங்குபவர்கள் அனுப்பவேண்டிய முகவரி:
இணை ஆணயர் / செயல் அலுவலர்,
அருள்மிகு சுப்பிரமணி சுவாமி திருக்கோயில்,
திருத்தணி - 631 209.
என்ற முகவரிக்கு நேரடியாகவோ, அஞ்சல் வழியாகவோ தொடர்பு கொள்ளலாம்.
*********************************
Please click on the links below for Mahishasura Mardhini Stotram Videos:
http://www.youtube.com/
http://www.youtube.com/
No comments:
Post a Comment