19 January 2012

ப்ரதோஷம் [Pradosham]



ப்ரதோஷ நாளில் ப்ரதோஷ காலமான மாலையில் சிவன் பார்வதியுடன் நந்தி தேவரின் கொம்புகளுக்கு நடுவே நின்று காட்சி அளிப்பார்.
அவ்வேளையில் மும்மூர்த்திகள் முதற்க்கொண்டு சகல கடவுள்களும் நவக்கிரகங்களும் இந்திராதி தேவர்களும் எட்டு திசை மன்னர்களும் சகல தேவ பூத கணங்களும் தேவாதி தேவர்களும் மற்றும் எல்லா ஜீவராசிகளும் ஈசனைக்காண சிவாலயங்களில் திரண்டிருப்பதால் அந்த வேளையில் சிவா
லயம் சென்று நந்தி தேவரை நாம் வணங்கிணால் சகல தெய்வங்களையும் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் கண்டு வணங்கிய பலன் கிட்டும்.


ப்ரதோஷம் என்றால் என்ன பொருள்? சிவ வழிபாட்டுக்கும் அதற்கும் என்ன தொடர்பு? இந்த ப்ரதோஷ வழிபாட்டை எந்த வகைகளில் சிறப்பாகச் செய்யலாம்?



நந்தி கேஸ்வரருக்கும் ப்ரதோஷ வழிபாட்டுக்கும் என்ன தொடர்பு?

‘சோம சூக்த ப்ரதக்ஷிணம்’ எவ்வாறு செய்ய வேண்டும்?

ப்ரதோஷம் தொடர்பான அனேகத் தகவல்களையும் இங்கு தொகுத்துத் தந்துள்ளேன்:

நந்தி தேவர்க்கு அல்ப ஆயுள் என்று அறிந்த அவர் தந்தை, ஸ்ரீருத்ர ஜபத்தை ஒரு கோடிமுறை ஜெபிக்கச் சொல்லி தன் பிள்ளையைப் பணித்தார்.

இந்த ஜபத்தின் முடிவில் நேரில் வந்த சிவபெருமானிடம் நந்தி கோரிய வரம்: ‘எனக்கு இன்னொருமுறை ஸ்ரீருத்ரத்தை ஒருகோடி முறை ஜெபிக்க அனுமதிக்க வேண்டும்’ வரம் தரப்பட்டது.

இவ்விதம் ஒருமுறை, இருமுறை அல்ல. ஏழுமுறை ஸ்ரீ ருத்ர ஜபம் செய்யும் வாய்ப்பு பெற்றார் நந்தி தேவர். இப்போது நேரில் வந்த சிவபெருமானே ‘ஏழு கோடி முறை ஸ்ரீருத்ர ஜபம் செய்தது போதும். உனக்கு தேவையான வரத்தைக் கேள்’ என்றார். ‘என் தந்தை வரையிலான எனது பித்ரு வர்க்கத்தினர் அனைவரும், பித்ரு கார்யங்கள் தேவைப்படாத, விதமாக அவர்கள் அனைவரும் சாம்ராஜ்ய பதவி அடைய வேண்டும்’ என்று கோரினார் நந்தி. மகிழ்ச்சி அடைந்தார் சிவபெருமான். ஏழு கோடி முறை ஸ்ரீ ருத்ர ஜபத்தை ஜபம் செய்து முடித்த உனக்கு நீ கோர வேண்டிய வரம் ஏதுமில்லை. உன் பித்ருக்களுக்கு அற்புத சாயுஜ்ஜியமும், உனக்கு ப்ரளய காலத்திலும் அழிவில்லாத, அந்த நேரத்திலும் என்னைத் தாங்கி நிற்கும் வாகனமாக இருக்க அருள் செய்கிறேன். இந்தப் பூமியில் சகல அதிகாரங்களும் கொண்ட அதிகார நந்தியாக, செழிப்பான ராஜ்யத்தை நீ நிர்வகிக்க வேண்டும்’ என்று சொல்லி, அவருக்கு ஏற்ற துணைவியைத் திருமணமும் முடித்து வைத்தார் சிவ பெருமான். ஸ்ரீ ருத்ர ஜபத்தால் நந்திகேஸ்வரர் அடைந்த மேன்மை இது.







ப்ரதோஷத்தின் முக்கியத்துவம்:

 ப்ரதோஷம் என்றால் சந்தியாக்காலம். சூரியன் அஸ்தமிக்கும் நேரம் பிரதோஷ காலம். பாற்கடலை கடைந்து அமுதம் பெற விழைகின்றனர் அசுரர்களும் தேவர்களும். வாசுகி எனும் பாமப்யே கயிறாகக் கொண்டு மந்திர மலையில் மத்தாக்கி பெரும் பாற்கடலைக் கடைகின்றனர். அமுதின் ஊடே நஞ்சும் எழும்ப, வாசுகி என்ற பாம்பு கக்கிய விஷமும் சேர்ந்து கொண்டு எங்கும் கடும் விஷம் கருமையாய் எழும்பி நின்றது. அஞ்சிய தேவர்களும் அசுரர்களுக்கும் ஈஸ்வரன் கருணை உள்ளம் கொண்டு அபயம் அளித்தார். தம் தொண்டர் சுந்தரரை விட்டு விஷம் கொணரச் செய்தார். சிவன் அதனை உட்கொண்ட பின்னர், சற்றே கலங்கிய பார்வதி, சிவனின் தொண்டையில் அழுத்தி விஷத்தை கீழறங்காமல் செய்து விடுகிறாள். திருநீலகண்டன் ஆகிய ஈசனின் கருணை உள்ளத்தை போற்றித் துதித்து சகல ஜீவராசிகளும் வழிபட்ட அந்த நேரம் ப்ரதோஷ நேரம்.

சகலரையும் காத்து நின்ற ஈசன் மனம் குளிர்ந்து அனைவரின் பயமும் வருத்தமும் போக நந்தி பெரிய ரூபம் எடுத்து நிற்க அதன் கொம்பின் நடுவே ஆனந்த நடனம் புரிகின்றார். இதன் பொருட்டே ப்ரதோஷ காலத்தில் நந்தியின் கொம்பின் வழியே இறைவனை தரிசிப்பது சாலச் சிறந்தது. வளர்பிறை / தேய்பிறையின் பதிமூன்றாம் நாள் பிரதோஷமாக பாவிக்கப்படுகிறது. சூரிய அஸ்தமனத்திற்கு முன்னர் மூன்றரை நாழிகையும் அஸ்தமனம் ஆன பின் மூன்றரை நாழிகையும் ப்ரதோஷ காலம். இந்நேரத்தில் ஈஸ்வர தியானத்தில் இருப்பது சிறந்தது.



ப்ரதோஷம் என்பது ஒடுங்கும் நேரம் என்ற கோணத்திலும் பார்க்கப்படுகிறது. ஜீவராசிகள் தங்கள் கூட்டுக்குள் அமிழ்ந்து அடங்கும் நேரம். ப்ரதோஷத்தை, நித்திய ப்ரதோஷம், பக்ஷப் ப்ரதோஷம், மாதப் ப்ரதோஷம், மஹா ப்ரதோஷம், பிரளய ப்ரதோஷம் என்று பலவாக வகைப் படுத்துகின்றனர்.

நித்திய ப்ரதோஷம்: என்பது தினமும் சந்தியா நேரத்தில் சிவனை வணங்கி அவன் தியானத்தில் இருப்பது.

பட்சப் ப்ரதோஷம்: சுக்லபட்ச[வளர்பிறை] சதுர்த்தி ப்ரதோஷ காலத்தில் சிவனை வழிபடுவது.

No comments:

Related Posts with Thumbnails