19 January 2011

தைப்பூசம்




" வேல் பிடித்த தெய்வத்தின் கால் பிடித்து உய்வோம்! "


நாளை தினம் தைப்பூசம் [20-01-2011].  இந்த நாளின் மகிமையைப் பற்றி இதோ உங்களுக்காக:

முருகப்பெருமான்

முருகன் கோவில்களில் மிகவும் முக்கியமான விழாக்களில் முதன்மையான தைப்பூசத் திருவிழா. குறிப்பாக பழனி அருள்மிகு பால தண்டாயுதபாணி திருக்கோவிலில், தைப்பூசம் வெகு விமரிசையாக நடைபெறும்.


பக்தர்கள் பாதயாத்திரை
பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து முருகனை வழிபடுவார்கள். பல்வேறு வகையான காவடிகளை ஏந்தியபடி லட்சக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு வருவார்கள்.

முருகப் பெருமான்
தைப்பூசம் என்பது சைவ சமயத்த்வர்களால் கொண்டாடப்பட்டுவரும் ஒரு விழாவாகும். நட்சத்திர வரிசையில்  பூசம் எட்டாவது நட்சத்திரமாகும். தைமாதப் பூச நட்சத்திரம் பெரும்பாலும் பௌர்ணமியில் வரும்.  உகந்த முருகனுக்கு நாள் தைப்பூச தினம் என்பர்.

தைபூசத்தின் மகிமை
தம்பதியர் ஒற்றுமையை வலியுறுத்துவதற்காகக் கொண்டாடப்படும் விழா தைப்பூசத்திருநாள். மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் தனித்து நடனமாடுவார் சிவபெருமான். நடன நிலையிலுள்ள சிவனை, “நடராஜர்’ என்று அழைக்கிறோம். தைப்பூசத் திருநாளில் அவர் உமாதேவியுடன் இணைந்து நடனமாடுகிறார். சிவனின் இந்த நிலையை, “உமா மகேஸ்வரர்’ என்பர். அவன் அசைந்தால் தான் உலகம் அசையுமென்ற நியதியை எடுத்துச் சொல்வதே நடன தத்துவம். ஐந்துவித தொழில்களை நடத்துகிறான் இறைவன். அவை: படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல். இதன் மூலம் அவன் உலக உயிர்களுக்கு சொல்வதைக் கேளுங்கள்.

வேல் முருகா
“உயிர்களே… நான் ஆடுகிறேன் என்றால், நீங்களும் ஆடுகிறீர்கள். இந்த ஆட்டத்தின் போது உங்களை நான் படைக்கிறேன். படைத்த உங்களைக் காப்பதற்காக எல்லா வசதிகளையும் இந்த உலகத்தில் தந்துள்ளேன். உங்கள் வாழ்வை முடிப்பவனும் நானே. முற்பிறவியில் நீங்கள் செய்த செயல்களை மறைத்து, அதற்குரிய பலனை மட்டும் அனுபவிக்கச் செய்யும் மறைத்தல் (மறக்கச் செய்தல்) தொழிலைச் செய்கிறேன். உங்களை பிறவியில்லா நிலைக்கு ஆளாக்கி, என்னுடன் கலக்க அருளுகிறேன். இவற்றையே நான் துணைவியுடன் இணைந்தாடும் ஆட்டத்தில் வெளிப்படுத்துகிறேன்…’ என்கிறான். இந்த உலகத்தை இறைவனும், இறைவியும் சேர்ந்து இயக்குகின்றனர் என்பதையும் இந்த நாட்டியம் உணர்த்துகிறது. உலகத்தை இயக்க எப்படி இந்த தம்பதியர் இணைந்திருக்கின்றனரோ, அதுபோல ஆணும், பெண்ணும், பிற உயிர்களும், தங்கள் குடும்பத்தை இயக்க தம் வாழ்க்கைத்துணையுடன் இணைந்து செயல்பட வேண்டும். கருத்தொருமித்து செயல்பட்டால், வாழ்க்கை வெற்றிப்பாதையை நோக்கிச் செல்லும்; குடும்பம் நல்ல முறையில் இயங்கும் என்பதையும் இது வெளிக்காட்டுகிறது.

வேல்
உயிர்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் இந்த நடனத்தை தன் தேவியுடன் இணைந்து நடத்த அவன் தேர்ந்தெடுத்த நட்சத்திரம் பூசம். பூசம் ஒரு உயர்ந்த நட்சத்திரம். தை மாதம், சூரியன் மகர வீட்டிலும், தைப்பூச நாளில் அவருக்குரிய சொந்த வீடான கடகராசியிலும் சஞ்சரிக்கிறார். அப்போது சூரியனின் ஏழாம் பார்வை சந்திரன் (கடகம்)வீட்டிலும், சந்திரனின் ஏழாம் பார்வை மகர வீட்டிலும் விழுகிறது. இது மிகவும் உயர்ந்தநிலை.

சூரியனால் ஆத்மபலமும், சந்திரனால் மனோபலமும் கிடைக்கிறது. எனவே, இதை வழிபாட்டுக்குரிய நாளாக தேர்வு செய்தனர். மேலும், சூரியன் சிவாம்சம்; சந்திரன் சக்தியின் அம்சம். எனவே தான் இருவரும் இணைந்து நடனமாடுவதாக ஐதீகம். இந்நாளில் சிவாலயம் சென்று வழிபாடு செய்வது மிகவும் சிறப்பானது. குறிப்பாக, தீர்த்தங்கள், ஆறுகளில் நீராடி சிவவழிபாடு செய்யும் தலங்களில் அம்பாளையும், சுவாமியையும் வழிபட்டால் விரும்பியவை நடக்கும் என்பது ஐதீகம்.

வள்ளி-தேய்வானையுடன் முருகப்பெருமான்
முருகப்பெருமானுக்கும் பூசம் உகந்தது. அவர் பூச நட்சத்திரத்தில் தான் வள்ளியை மணந்து கொண்டார். இந்நாளில் முருகனுக்கு காவடி எடுப்பதுண்டு. அகத்தியர் தந்த சிவகிரி, சக்திகிரி என்ற மலைகளை காவடி போல் கட்டி தூக்கி வந்தான் இடும்பன் என்ற அசுரன். அவனை தடுத்து நிறுத்தி, அந்த மலைகளை ஆட்கொண்டார் முருகபெருமான். “மலை போன்ற துன்பங்கள் உனக்கு வரலாம்; ஆனால், அதை சுமப்பது உன் வேலையல்ல. அதை என்னிடம் ஒப்படைத்து விடு. நீ உன் பாதையில் செல்…’ என்பதே காவடி தத்துவம். இதற்காகத்தான், முருகன் கோவில்களில் பக்தர்கள் காவடி எடுப்பர்.
தைப்பூசம் நன்னாளில் தம்பதி சமேதரராக சிவாலயங்களுக்கும், முருகன் கோவில்களுக்கும் சென்று, எந்த சந்தர்ப்பத்திலும் பிரியாத வரம் வேண்டி வருவது நல்லது. 

ஓம் சரவண பவ 


சிறப்புகள்

  • தைப்பூசத்தன்று தான் உலகம் தோன்றியதாக ஐதீகம்.
  • சிவபெருமான் உமாதேவியுடன் இருந்து சிதம்பரத்தில் ஆனந்த நடனம் ஆடி, தரிசனம் அளித்த நாள் தைப்பூசம் என்பர்.
  • சிதம்பரத்திற்கு வந்து அரும்பெரும் திருப்பணிகள் செய்து, நடராஜரை இரணியவர்மன் என்னும் மன்னன் நேருக்கு நேராகத் தரிசித்தது இந்நாளிலேயே. இக்காரணங்களுக்காகவே சிவன் கோயில்களில் தைப்பூசத்தன்று சிறப்பு அபிஷேகங்களுடன் பூஜைகள் நடத்தப்படுகின்றன.
  • தேவர்களில் குருவாகிய பிரகஸ்பதியின் நட்சத்திரம் பூசம் என்பதால் தைப்பூசத்தன்று குருவழிபாடு செய்வது மிகுந்த பலனைத் தரும் என்பர்.
  • வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் ஒரு தை மாத வெள்ளிக்கிழமை புனர்பூச நட்சத்திரத்தன்று தான் சமாதியானார். இதனைக் குறிக்கும் விதமாக அவர் சமாதியான வடலூரில், தைப்பூசத்தன்று லட்சக்கணக்கானோர் கூடி வள்ளலார் விழாவைக் கொண்டாடுகிறார்கள்.

தைப்பூச விரத முறை 


விரத முறை 



காவடி
தைப்பூசத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு, திருநீறு , உருத்திராட்சம்  அணிந்து சிவபெருமானை வழிபடுவர். தேவாரம் , திருவாசகம் போன்றவற்றைப் பாராயணம் செய்வர். உணவு உண்ணாமல் 3 வேளைகளிலும் பால் , பழம் சாப்பிடலாம். மாலையில் கோயிலுக்குச்   சென்று சிவ பூஜையில் பங்கேற்று சிவனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்வர்.

காவடி
தைப்பூசத்தில் தான் யாழ்ப்பாண  மக்கள் புது நெல்லு[(புதிர்] எடுப்பர். தைப்பூசம் முருகனுக்கு உரிய சிறப்பான தினமாகக் கொண்டாடப்படுகின்றது. அன்று அதிகாலையில் எழுந்து வீடு வாசலைச் சுத்தம் செய்து வீட்டில் இருக்கும் ஆண்கள் நெல்லறுக்கும் அருவாள், தேங்காய், கற்பூரம், கத்தி, கடகம்  என்பவற்றுடன் வயலுக்குச் சென்று கிழக்கு முகமாக நின்று சூரியனை வணங்கி ஒருவர் தேங்காய் உடைக்க மற்றவர் முற்றிய புது நெற்கதிர் சிலவற்றை அறுத்து வீட்டிற்கு எடுத்து வருவர்.



 பால் குடம் 
அதனைக் குடும்பத்தலைவி பெற்று சுவாமி அறையில் வைப்பார். அதில் இருந்து சில நெல்மணிகளை எடுத்து  உமியை நீக்கி அந்த அரிசியைப் பசும்பாலுடன் கலந்து வாழைப்பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கி அதில் இட்டு குடும்பத்தினருக்குப் பரிமாறுவர். அந்த அரிசியுடன் வீட்டிலுள்ள அரிசியையும் கலந்து அன்றைய மதிய உணவு சமைக்கப்படும். ஊரில் உள்ள முருகன் கோயில்களில் பால் குடம் எடுத்தும் காவடி எடுத்தும் தத்தம் நேர்த்திகளை நிறைவேற்றுவர்.


பழனியில் தைப்பூசம்

பழனி கோயில் தைப்பூச திருவிழா தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் பாத யாத்திரையாக வருவர். பழநியில் 10- நாள் திருவிழாவாக கொண்டாடப்படும் தைப்பூசம் ஜனவரி 14ல் தொடங்குகியது.  

பழனியில் தைப்பூசம்
ஜனவரி 23-ம் தேதியன்று காலை 8.30 மணிக்கு புதுச்சேரி சப்பரத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சியும் அன்று மாலை 5.30 மணிக்கு மேல் தெப்பத்தேர் உற்சவமும் நடக்கிறது. இதனை தொடர்ந்து இரவு 11.30 மணிக்கு மேல் கொடியேற்றுதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இத்திருவிழா நாட்களில் மலைக்கோயிலில் அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது.

பழனி தைப்பூச திருவிழாவுக்கு மதுரை, தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்க மதுரை அரசு போக்குவரத்து கழகம் ஏற்பாடு செய்து உள்ளது. 
" வேல் வேல் வெற்றி வேல் "

Thai Pusam Festival

Thaipusam is an important festival dedicated to Lord Muruga or Kartikeya. Thaipusam 2011 falls on thursday, the 20th January 2011.  Let us learn more about this important Hindu festival and its significance. 

Lord Murugan
Thaipusam [தைப்பூசம்] is a Hindu festival celebrated mostly by the Tamil community on the full moon in the Tamil month of Thai [January/February]. It is celebrated not only in countries where the Tamil community constitutes a majority, but also in countries where the Tamil community is a minority, such as Singapore and Malaysia. 
The festival is also referred to as Thaipooyam or Thaippooyam[Malayalam: തൈപ്പൂയംTaippūyaṁ]



The word Thaipusam is derived from the month name Thai and Pusam, which refers to a star that is at its highest point during the festival. The festival commemorates the occasion when Parvati gave Murugan a vel [spear] so he could vanquish the evil demon Soorapadman. There is a misconception among people that Thaipusam marks Murugan's birthday; however, it is believed that Vaikhasi Vishakam, which falls in the Vaikhasi month [May/June], is Murugan's birthday.


The Legends associated with Thaipusam:

Kartikeya.:
Vel Myth:

Kanda [or Murugan] was created during one of the battles between the Asuras. or to be more specific Surapadman) and the Devas.  At one point, the latter were defeated several times by the former. The Devas were unable to resist the onslaught of the Asura forces. In despair, they approached Shiva and entreated to give them an able leader under whose heroic leadership they might obtain victory over the Asuras. They surrendered themselves completely and prayed to Shiva. Shiva granted their request by creating the mighty warrior, Skanda, out of his own power or Achintya Shakti. He at once assumed leadership of the celestial forces, inspired them and it is belived that Lord Murugan killed the Tarakasuran during the Pusam star of the month Thai. Hence it led to the celebration of Thai Pusam.


This festival is celebrated with much fervor everywhere in Tamilnadu.

People walk in groups the land to Palani with Kavadis to get the darshan of Lord Murugan during Thai pusam.



The curse imparted on Lord Murugan:


Lord Shiva-Parvathi with Murugan
Lord Shiva was providing an important mantra to Parvathi. Lord Murugan eavesdropped this. When mother Parvathi became aware of this, she cursed Lord Murugan. Lord Murugan, realizing his guilt prayed for apology. Parvathi, pleased by this, appeared with Shiva before Lord Murugan and forgave him. The day that Parvathi appeared before Murugan is celebrated as Thai Pusam.


The Cosmic dance:



Cosmic Dance of Lord Shiva

Another legend is that Shiva and Parvathi were involved on a cosmic dance during this period, which led to the celebration of Thai Pusam.

The Kaveri legend:

The Kaveri Legend

River Kaveri fed up with the entire attention river Ganga was receiving, prayed to Lord Vishnu. So Lord Vishnu appeared and blessed her on Thai pusam.

Kavadi

Kavadi Attam is a dance performed by the devotees during the ceremonial worship of Murugan, the Tamil God of War.  It is often performed during the festival of Thaipusam and emphasizes debt bondage. The Kavadi itself is a physical burden through which the devotees implore for help from the God Murugan.

Kavadi
Generally, Hindus take a vow to offer a kavadi to idol for the purpose of tiding over or averting a great calamity. For instance, if the devotee's son is laid up with a fatal disease, he would pray to Shanmuga to grant the boy a lease of life in return for which the devotee would take a vow to dedicate a kavadi to Him


Preparations

Devotees prepare for the celebration by cleansing themselves through prayer and fasting approx-48 days before Thaipusam. Kavadi-bearers have to perform elaborate ceremonies at the time of assuming the kavadi and at the time of offering it to Murugan. The kavadi-bearer observes celibacy and take only pure, Satvik food, once a day, while continuously thinking of God.
Kavadi Rituals

On the day of the festival, devotees will shave their heads and undertake a pilgrimage along a set route while engaging in various acts of devotion, notably carrying various types of kavadi. At its simplest this may entail carrying a pot of milk, but mortification of the flesh by piercing the skin, tongue or cheeks with vel skewers is also common.

Kavadi Attam
The simplest kavadi is a semicircular decorated canopy supported by a wooden rod that is carried on the shoulders, to the temple. In addition, some have a small spear through their tongue, or a spear through the cheeks. The spear pierced through his tongue or cheeks reminds him constantly of Lord Murugan. It also prevents him from speaking and gives great power of endurance. 


Kavadi

Kavadi
Other types of kavadi involve hooks stuck into the back and either pulled by another walking behind or being hung from a decorated bullock cart or more recently a tractor, with the point of incisions of the hooks varying the level of pain. The greater the pain the more god-earned merit.

Theppam or the Float Festival

Theppam or the Float Festival is celebrated with much zeal and enthusiasm in all the Murugan Temples all over the world.  

Theppam or Float Festival in Kapaleeshwarar Temple,Mylapore
This annual Float Festival called Theppam during Thai Poosam,  in the Kapaleeshwarar tank is held normally for three days starting from Thai PoosamThe East Mada Street throngs with devotees on the three days beginning from Thai poosam. 
Even youngsters gather in large numbers to take a look at the moving theppam. One can find mothers telling stories to their kids and old people in search of serenity etc.  Such is the prevailing atmosphere during this festival. 

The First Day of Theppam Festival

Theppam Festival 
On the first day, Kapaleeswarar and Karpagambal are taken on the float. On the second day, Murugan with Valli Devyanai are taken. The float is constructed on several barrels. Vedic scholars and musicians travel along with the float which goes for three rounds starting after dusk and ending around 9-30 p.m. Here are some images of the second day of 2010. 


The Decorated Float
A Closer View of the Float Festival

The Float  illuminated during Theppam Festival
After a long gap,he temple authorities have taken steps to get the float festival going and the said temple tank is having plenty of water only for the last two years. 

It is said that during the theppam , the lord showers his grace on the aquatic beings through his presence in the water. The presiding deity, Kapaleeshwara is decorated and placed in the float which sails thrice around the tank.  The float is illuminated with bright lamps, and the entire tank sparkle for all the three evenings. It is indeed a wonderful sight for one and all to witness this joyous festival.  

Celebrations



ThaiPusamFestival Crowd in Palani Temple
Devotees in Palani Temple
Pada-Yatra to Palalni Temple for ThaiPusam
In Palani, Tamil Nadu, India, Thousands of devotees flock to Palani and attend kavadi. According to the info,  "The number of kavadis reaching Palani for Thai Pusam is about 10,000. For Pankuni Uttiram, 50,000 kavadis arrive. It is kavadi to your right, kavadi to your left, kavadi in front of you, kavadi behind you, kavadi above you and kavadi below you.


Haripad Subramanyaswamy Temple- ThaiPusam

In Haripad Subramayaswami Temple, Alapuzha, Kerala, is famous for Kavadiyattom. Almost 5000 kavadis coming to the temple from many temples in the locality.

ThaiPusam in Vaikom,Kerala
In Vaikom, Kerala, India,  Thai Pusam festival is conducted with Kaavadis at Udayanapuram Subramanya temple. Devotees take panchamritha kaavadi, paal kaavadi, bhasma kaavadi, etc.



In Karamamana, Thiruvananthapuram, Kerala, India, Thai Pusam festival is conducted at Satyavageeswara temple. The utsava moorthy is taken in procession on a vahanam [mount]. There is nel [Paddy] parai alappu or Nel alavu, as a ritual performed for good luck and prosperity.


Please click on the link to whatch the Video of the Karamana ThaiPusam Festival, Kerala:




In Nallur, Jaffna, Sri Lanka, Thai Pusam festival is conducted at Nallur Kandhasamy Temple. Many Tamil devotees irrespective of religion take part in celebrations. Even Tamils from Roman Catholic faith and Muslims take part in Thai Pusam celebrations and take Kavadis

Outside India



The largest Thai Pusam celebrations take place in Singapore Mauritius, and Malaysia. It is a public holiday throughout the whole Malaysia.


Thai Pusam Festival - Batu Caves, Malaysia
The temple at Batu Caves,  near Kuala Lumpur,  often attracts over one million devotees and tens of thousands of tourists. The procession to the caves starts at the Sri Mahamariamman Temple, Kuala Lumpur in the heart of the city and proceeds for 15 kilometers to the caves, an 8-hour journey culminating in a flight of 272 steps to the top. 


Thaipusam in Gunong,Ipoh
Lime-Kavadi-Another form of Worship
Thaipusam is also celebrated at another cave site, the Sri Subramaniar Temple in Gunong Cheroh,Ipoh, Perak  and at the Nattukottai Chettiar Temple along Jalan Waterfall in Penang.  Temple secretary P. Palaiya Sri Subramaniar Temple in Gunong Cheroh reports that about 250,000 devotees participate every year  in this festival, which  includs 300 kavadi bearers, while 15,000 come with milk offerings.


Although rare, scenes of people from different ethnic groups and faiths bearing "kavadi" can also be seen in Malaysia. Thaipusam is also increasingly being celebrated by the ethnic Chinese in Singapore and Malaysia. 

Thai Pusam in Singapore
In Singapore, Hindu devotees start their procession at the Sri Srinivasa Perumal Temple  in the early morning, carrying milk pots as offerings or attaching "Kavadis" to their bodies.  The procession travels for 4 kilometres before finishing at the Tank Road Temple. The devotees are usually accompanied by supporters who cheer to keep their morale high.
Devotees at ThaiPusam,Singapore

Kavadi-PaalKodam in Singapore
This temple is the starting point for devotees during the annual Thaipusam festival. Devotees, their tongues and cheeks pierced by great metal skewers supporting Kavadi [cage-like constructions decorated with wire and peacock feathers], make their way to the Chettiar Hindu Temple on Tank Road in this colourful procession. This is done in gratitude or supplication to Lord Murugan

Kavadi- in Singapore 

" Vel Vel Vetri Vel "

For more info on this year Thai Pusam, you may click on the link below:



12 January 2011

தைப்பொங்கல்

பொங்கல் வாழ்த்துக்கள்.
பொங்கல் விழா சில இடங்களில் நான்கு நாள் கொண்டாட்டம் ஆகும்
இந்தத் திருநாளைப்பற்றி இதோ உங்களுக்காக...

சூரியன் மகர ராசியில் அதாவது பூ மத்ய ரேகையிலிருந்து வடக்குப் ப்க்கம் போக ஆரம்பிக்கும் முதன் நாள் நமது பொங்கல் திருநாள் இதை சஸ்கிருதத்தில் உத்தராயணம் என்பார்கள் மஹா பாரதப் போரில் பாண்டவ்ர்களின் பாட்டனாரான திரு பீஷ்மர் துரியோதனின் பக்கம் இருந்தவர் அவர் மேல் சண்டையின் போது அம்புப் பட்டு கீழே விழுந்தார் ஆனால் அவர் உத்தராயணத்தில் தன் உயிரை நீக்க எண்ணி முள்ப்டுக்கையில் உயிரைப் பிடித்துக் கொண்டு படுத்திருந்தார் பின் இந்த சங்கராந்தியின் போது உயிர் நீத்தார்.  அவ்வளவு புண்ணியக் காலம் இது மிகச் சிறந்த நாள்.
இந்தியா விவசாயத்தை முக்கியமாகக்கொண்ட நாடு.  எல்லா பசுமைக்கும் காரணம் சூரிய வெளிச்சம் சூரிய வெப்பத்தினால் தான் செடிகள் வளருகின்றன ஆகையால் விவசாயிகள் நன்குப் பயிர் வளர்ந்துப் பறிக்கத்தயாரான நிலையில் முதல் சாகுபடியைத் தங்கள் கடவுளுக்கும் சூரிய பகவானுக்கும் படைக்கிறார்கள் இதுவே பொங்கல் திருநாள், அன்று விடிக்காலையில் குளித்து புது உடைகளையும் உடுத்தி சர்க்கரைப் பொங்கல் செய்து  சூரியனுக்குப் படைக்கிறார்கள் இன்று ஆதித்ய ஹிருதயம் என்ற ஸ்லோகம் சொன்னால் மிக்வும் நல்லது பாலுடன் வெல்லமும் கலந்து அரிசியையும் போட்டுப் பின் கொதித்துப் பொங்கும் நேரம் வீட்டில் எல்லோரும் பொங்கலோப் பொங்கல் என்று மகிழ்ச்சியுடன் கூவி ஆனந்தம் அடைக்கிறார்கள் அந்தப் பொங்கல் பானையின் மேல் மஞ்சளின் இலை, கிழங்கும் சுற்றி மஞ்சள் குங்குமம் இட்டு வைப்பார்கள். 
போகி தமிழ் ஆண்டின் மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று கொண்டாடப்படுகிறது.  பொங்கல் திருநாளின் முதல்நாள் கொண்டாடப்படுகிறது. இதுநாள் 'பழையன கழித்து, புதியன புகவிடும்' நாளாகக் கருதப்படுகிறது. பழையவற்றையும், உபயோகமற்றவையும் விட்டெறியும் நாளாகக் கருதப்படுகிறது. பழந்துயரங்களை அழிப்பதான இப்பண்டிகையைப் "போக்கி' என்றனர். அந்தச் சொல் நாளடைவில் மருவி "போகி' என்றாகிவிட்டது. அக்கால வழக்கப்படி வருடத்தின் கடைசிநாள் என்பதால் நடந்து முடிந்த நல் நிகழ்வுகளுக்கு நன்றி கூறும் நாள் போகி என்போரும் உண்டு. கடந்த வருடத்திற்கு நன்றி சொல்லும் நாள் போகிப்பண்டிகை.

போகிப்பண்டிகை.

அன்றைய தினம், வீட்டில் தேங்கிப் போயிருக்கும் குப்பைகள் தேவையற்றபொருட்களை அப்புறப்படுத்தப்பட்டு வீடு சுத்தமாக்கப்படும். வீடு மட்டுமல்ல மனதில் இருக்கும் தீய எண்ணங்களும், தவறான எண்ணங்களும் நீக்கப்படவேண்டும் என்பது இதில் உள்ள தத்துவமாகும்.
இதையொட்டியே பொங்கலுக்கு முன் வீட்டிற்கு புது வர்ணம் பூசி வீட்டை அழகு படுத்துகிறார்கள். பொங்கல் சமயத்தில் வீடு புதுப் பொலிவுடன் காணப்படும். இது கிராமங்களில் பொங்கல் சமயத்தில் காணக் கிடைக்கும் இனிய காட்சியாகும்.
இல்லம் தோறும் போகி அன்று, வைகறையில் 'நிலைப்பொங்கல்' நிகழ்வுறும். வீட்டின் முன்வாயில் நிலைக்குப் மஞ்சள் பூசி, திலகமிட்டு, தோகை விரிந்த கரும்பொன்றைச் சாத்தி நிற்கச் செய்து வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு, குங்குமம் வைத்து, தேங்காய் உடைத்து, கர்ப்பூரம் காட்டி இல்லுறை தெய்வத்தை வணங்குவர். சிறு மணித்துளிகளில் இது முடிவுறும். இதைக் குடும்பத்தலைவி நடத்துவார்.
போகிப் பண்டிகையின் போது போளி, வடை, பாயசம் போன்றவை இறைவனுக்கு நிவேதனம் செய்யப்படும்


தைப்பொங்கல் தை 1அன்று தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. தமிழர் திருநாளாக தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆபிரிக்கா, மொரிசியஸ், என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. இவ்விழா சமயங்கள் கடந்து அனேக தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாக கொண்டாடப்படுகிறது.
தைப்பொங்கல் வரலாறு:
சங்ககாலத்தில் அறுவடை காலத்தில் நலல் மழை பெய்யவும், நாடு செழிக்கவும் பெண்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடித்தார்கள். தை முதல் தினத்தில் இந்த விரதத்தை முடிப்பார்கள். நல்ல விளைச்சல் கொடுத்தமைக்காக  பூமி, சூரியன், உதவிய மாடு போன்றவற்றிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபட்டனர். இதுவே நாளடைவில் மூன்று தினங்கள் கொண்டாடும் பொங்கல் திருநாள் கொண்டாட்டமாக மாறியது. 
தைப்பொங்கலுக்கு சில நாட்களுக்கு முன்னரே கொண்டாட்ட வெடிகள் வெடிக்க தொடங்கி விடும். பொங்கலுக்கு தேவையான பொருட்களை ஆயத்தப்படுத்திக் கொள்வர். .



பொங்கலோ பொங்கல்
பொங்கலன்று அதிகாலை எழுந்து முழுகுவர். வீட்டு முற்றத்தில் கோலம் இட்டு அதன் நடுவில் பானை வைப்பர்.புதுப்பானையில் புது அரிசியிட்டு முற்றத்தில் பொங்க வைப்பார்கள். புதிய பானைக்கு புதிய  மஞ்சளைக் காப்பாக அணிவர். புதிய மஞ்சள் கொத்தையும் புதிய கரும்பையும் புதிய காய்கறிகளையும் அன்று பயன்படுத்துவர். முற்றத்திற்கோலம் தலை வாழையிலையில் நிறைகுடம் வைத்து விளக்கேற்றி கதிரவனை வணங்கி பொங்கலிடத் தொடங்குவர். இந்துத் தமிழர்கள், சாணத்தில் பிள்ளையார் பிடித்தும் வைப்பார்கள். பொங்கல் பொங்கி வரும் வேளையில் குடும்பத் தலைவன், மனைவி மக்களுடன் கூடி நின்று "பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்!" என்று உரக்கக் கூவி அரிசியை இருகைகளாலும் அள்ளிப் பானையில் இடுவர். தனது முதற் பயனை கதிரவனுக்குப் படைத்துப் பின் குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் கொடுத்த பின்பே தான் நுகர்வான். இது தமிழரின் பண்பாடாக தொன்று தொட்டு உள்ளது என்பர் . 
இதன் முதல் நாள் போகி என்று வீட்டைச் சுத்தம் செய்து வெளிக்குப்பைகளையும் சேர்த்து எரிக்கிறார்கள் அதாவது நம் ம்னம் அழுக்கில்லாமல் நாமும் கெட்டப் பழக்கங்களை எரித்துவிடவேண்டும்.

கனு பொங்கல்:

பொங்கல் மறுநாள்" கனு" என்றுச்சொல்லும் திருநாள் அன்று சகோதரிகள் தங்கள் சகோதரர்களுக்காக் அவர் நலதிற்காக பிரார்த்தனைச் செய்கிறார்கள்,அதற்கு சாத உருண்டைகளை மஞ்சள் குங்குமத்துடன் பிசைந்து உருட்டி பின் ஒரு மஞ்சல் கொத்து இலையில் வெளியில் வைக்க, அது காக்காய் குருவிகளுக்கு ஆகாரம் ஆகிறது.  

இரண்டுமஞ்சள் இலைகளை அல்லது வாழை இலைகளை கிழக்குமுகமாய் ஆற்றங்கரையிலோ அல்லது வீட்டு மொட்டைமாடியிலோ கோலமிட்டு அதன்மீது வைக்கவேண்டும்.

முதல்நாள் பொங்கிய சாதத்தில் மஞ்சள்பொடிதூவி மஞ்சள்சாதம் கொஞ்சம், குங்குமம் கலந்த சிவப்பு சாதம் கொஞ்சம், வெள்ளையாய் பால்சாதம் கொஞ்சம், வெல்லம் சேர்த்த சக்கரைப்பொங்கல் கொஞ்சம் லேசாய் தயிர் சேர்த்த தயிர்சாதம் என 5வகை அன்னங்களை தயாரிக்கவேண்டும்,ஒவ்வொன்றிலும் 5அல்லது 7பிடி எடுத்து இலைமீது வரிசையாய் வைக்கும்போது,
கனு பிடி[In my house]

.....காக்கா பிடி வைத்தேன், கனு பிடி வைத்தேன், காக்காய்க்கும் குருவிக்கும் கல்யாணம் காக்கா பிடி வைத்தேன், கனு பிடி வைத்தேன், கண்டவர்க்கெல்லாம் சந்தோஷம்...காக்காய்க்கூட்டம் போல எங்கள் கூட்டம் கலயாமல் இருக்கனும்" 

என்று சொல்லிக்கொண்டே வைக்கவேண்டும். தீபம் ஏற்றிவிட்டு ஆரத்தி கரைத்து ஆற்றில் விடவேண்டும்.. வீட்டிலென்றால் வாசலில் கொட்டவேண்டும்.

உடன் பிறந்தவர்கள் உள்ளூரில் இருந்தால் அழைத்து கலந்த சாதம் பாயசம் செய்து விருந்து போடவேண்டும். அவர்கள் தரும் அன்பளிப்பை பெற்றுக்கொள்ள வேண்டும். சகோதரிகளையும் உடன்பிறந்தவர்கள் காலை அழைத்து விருந்து வைப்பார்கள். அனைவரும் அன்று குடும்பத்தில் ஒன்றுகூடி காணப்படுவதால் இது காணும் 
பொங்கல் ஆகி இருக்கலாம்!

கனு பொங்கல் கொஞ்சம் விசேஷமானது. கனு பொங்கல் என்று சகோதரர்கள், சகோதரிகளுக்கு ஏதாவது தர வேண்டும். என் அத்தைகளுக்கு அவர் சகோதரர் [என் மாமனார்] சில வருடங்களுக்கு முன்பு இறக்கும் வரை பணம் அனுப்பிக் கொண்டு இருந்தார். சில பத்து ரூபாய் மணியார்டர் வரும். ஆனால் ஞாபகம் வைத்து சகோதரன் அனுப்பவது அவருக்கு மிக சந்தோஷம்!

என் மாமனாரின் ஆசைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், இந்த பழக்க வழகங்களை விட்டுவிடாமல், என் அத்தைக்கு இன்று வரை "கனு"விற்கு பணம் அனுப்பிக்கொண்டுதான் இருக்கிறோம்!

இதனை நான் மிகப் பெருமையுடன் கூறுகிறேன்.


மாட்டுப் பொங்கல் என்பது தைப்பொங்கல் நாளின் மறுநாள் தமிழர்களால் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை ஆகும். இது பட்டிப் பொங்கல் அல்லது கன்றுப் பொங்கல் எனவும் அழைக்கப்படுகிறது. மக்களின் வாழ்வில் ஒன்றிய பசுவுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும், பசுக்களில் எல்லாத் தேவர்களும் இருப்பதாலும் பசுக்கலை வணங்கி வழிபடும் நாளாகக் கொண்டாடுகின்றனர்.


மாட்டுப் பொங்கல் 
அன்று மாடுகள் கட்டும் தொழுவத்தினைச் சுத்தம் செய்து கொள்வார்கள். கால்நடைகளை குளிப்பாட்டி சுத்தம் செய்வார்கள். மாடுகளின் கொம்புகள் சீவப்பட்டு பளபளக்கும் வகையில் வண்ணம் பூசி, கூரான கொம்பில் குஞ்சம் அல்லது சலங்கை கட்டிவிடுவார்கள். கழுத்துக்கு தோலிலான வார் பட்டையில் ஜல், ஜல் சலங்கை கட்டி அழகு படுத்துவார்கள்.  திருநீறு  பூசி குங்குமப் பொட்டிட்டும் புதிய மூக்கணாங் கயிறு, தாம்புக் கயிறு அணிவித்தும் தயார் செய்வார்கள்.


மாட்டுப் பொங்கல் 
உழவுக்கருவிகளை சுத்தம் செய்து சந்தனம், குங்குமம் வைப்பார்கள். விவசாயத்தில் பயன் படுத்தப்படும் அனைத்து கருவிகளையும் இதேபோல செய்வார்கள். தாம்பாளத் தட்டுகளில் தோட்டம் காடுகளில் விளைந்த பயிர், பச்சைகளை வைத்தும் தேங்காய், பூ, பழம், நாட்டுச் சர்க்கரை என எல்லாம் பூஜைக்காக எடுத்து வைப்பார்கள். தொழுவத்திலேயே பொங்கல் பொங்கி கற்பூர தீபாராதனை காட்டப்படும். இதன் பின் பசு, காளை, எருமை என அனைத்து கால்நடைகளுக்கும் பொங்கல், பழம் கொடுப்பார்கள்.


ஜல்லிக்கட்டு விளையாட்டு
இப்போதும் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் காளை பிடிக்கும் ஜல்லிக்கட்டு விளையாட்டு இந்நாளில் நடைபெறும். அதாவது முரட்டுக் காளையையின் கொம்பைப் பிடித்து அடக்க வேண்டும்.  அதற்குப் பரிசும் உண்டு ! 

காணும் பொங்கல்


அதற்கு மறு நாள் காணும் பொங்கலில் ஊர் சுற்றி கூட்டமாக் பீச், சினிமா என்றுப் பிக்னிக் வைத்துக் கொண்டு மகிழ்வார்கள். ஒவ்வொரு வருடமும் காணும் பொங்கல் அன்று மக்கள் பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு தங்கள் குடும்பத்தினருடன் சென்று கண்டுகளிப்பார்கள். அந்த வகையில் இந்த வருடமும் காணும் பொங்கல் அன்று பல்வேறு சுற்றுலா தளங்களில் மக்கள் கூட்டம் அலைமோதும்.

காணும் பொங்கலுக்கு கட்டாயம் பொருட்காட்சி செல்வார்கள்.  சிலர் கடைகளுக்கு செல்வார்கள்.  வியாபாரிகளுக்கும் கொண்ட்டாட்டம் தான்!



காணும் பொங்கல்

பொங்கல் பண்டிகையின் 4வது நாள் அன்று காணும் பொங்கல் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. வழக்கம் போல சென்னை மற்றும்  சுற்றுப்புறங்களில் உள்ள மக்கள், சென்னை கடற்கரை, கிண்டி சிறுவர் பூங்கா, வள்ளுவர் கோட்டம் உள்பட பல்வேறு இடங்களில் குடும்பத்துடன் குவிந்த வண்ணம் இருப்பார்கள்.



காணும் பொங்கலை முன்னிட்டு , ஒவ்வொரு வருடமும் மக்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகளை தமிழக அரசு ஏற்பாடு செய்கிறது.






              பொங்கல் பண்டிகை - கோலம்

Related Posts with Thumbnails