14 March 2011

கணவனைக் காக்கும் காரடையான் நோம்பு

14-3-2011 காரடையான் நோன்பு.


மாங்கல்ய பாக்கியம் தரும் மகத்தான வழிபாடு காரடையான் நோன்பு. தன் கணவன் நலமுடனிருக்க சுமங்கலிகளால் கடைப்பிடிக்கப்படும் நோன்பு இது.

மாங்கல்ய பாக்கியம் 


மாசியின் முடிவில் பங்குனியின் துவக்கத் தில் கடைப்பிடிக்கப்படும் இந்த நோன்பு புராண காலத் தொடர்புடையது.

மத்ர தேசத்து மன்னன் அச்வபதியின் மகள் சாவித்திரி. பருவ மங்கையானசாவித்திரி யிடம், ""உனக்கு ஏற்ற கணவனை உன் விருப் பத்திற்கேற்ப நீயேதேர்ந்தெடுத்துக் கொள்'' என்று முழு உரிமையும் வழங்கினார் அவள் தந்தை.

இந்நிலையில் சால்வ தேசத்து மன்னர் எதிரிகளால் விரட்டப்பட்டு, அரச பதவியைஇழந்து காட்டில் வாழ்ந்து வந்தார். அவரது மகன்தான் சத்தியவான்.


ஒருசமயம் தன் தோழிகளுடன் வனப் பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சியின் அழகைக்காணச் சென்றாள் சாவித்திரி. அங்கு சத்திய வானைக் கண்டாள். அவன்மீது காதல்கொண்டாள். தன் தந்தை யிடம் தன் விருப்பத்தைச் சொன்னாள். அந்த வேளையில் அங்கு வந்த நாரதர், ""சத்தியவான் ஆயுள் பலம் இல்லாதவன். இன்னும் ஒரு வருடத்தில் அவன் இறக் கும் வாய்ப்பு உள்ளது'' என்றுஎச்சரித்தார். இருப்பினும், "சத்தியவானைத்தான் மணப் பேன்' என்றுசாவித்திரி உறுதியாக இருந்த தால், தன் மகளின் விருப்பப்படி திருமணம்செய்து வைத்தார் சாவித்திரியின் தந்தை.

தன் கணவன் வாழும் இடமே தனக்கு சொர்க் கம் என்று, கணவன் வசிக்கும்காட்டிற்குச் சென்று வசித்து வந்தாள். தினமும் காட்டில் விறகு வெட்டி அதனைவிற்று பெற்றோருட னும் தன் மனைவியுடனும் வாழ்ந்து வந்தான் சத்தியவான்.


"நாரதர் சொன்னதுபோல் தன் கணவனின் ஆயுள் விரைவில் முடிந்துவிடும் நிலைஏற்பட் டால் என்ன செய்வது?' என்று யோசித்த சாவித்திரி, தன் கணவனின் ஆயுளைநீடிக்க விரதம் மேற்கொள்ளத் திட்டமிட்டாள். அதன்படி பார்வதி தேவி கடைப்பிடித்த விரதத்தினை மேற்கொண்டாள்.

தன் கணவன் விறகு வெட்டச் செல்லும் போது, கார் அடையும் வெண்ணெயும் தயார்செய்து, தன் குல தெய்வத்திற்குப் பூஜை செய்து, மஞ்சள் சரடை பூஜையில்வைத்து, அதில் ஒன்றைக் கையில் கங்கணமாகக் கட்டிக் கொண்டாள். அன்றே நல்லசுப வேளையில் திருமாங்கல்யச் சரடையும் மாற்றிக் கொண்டாள். அந்த நாள் மாசிமாதக் கடைசியும் பங்குனி மாதம் ஆரம்பமாகும் சுப வேளையும் ஆகும்.

காட்டில் விறகு வெட்டச் சென்ற சாவித்திரி யின் கணவன் சத்தியவான், நாகம்தீண்டியதால் ஆபத்தான நிலையில் குடிலுக்கு வந்து வீழ்வதற் கும் அவன் உயிர்பிரிவதற்கும் சரியாக இருந்தது. தன் கணவன் இறந்து விட்டான் என்பதை அறிந்தசாவித்திரி தன் கற்பு வலிமையால் யமனை அங்கு வரவழைத்து நியாயம் கேட்டாள்.

"ஆயுள் முடிந்து விட்டது. விதிப்படி என் கடமையைச் செய்தேன்'' என்று யமதர்மராஜன் கூறினான். இருந்தாலும் யமனுடன் வாதம் செய்தாள் சாவித்திரி.கடைசியில் தனக்கு ஒரு வரம் தரும்படி யமனிடம் கெஞ்சினாள். அவளது கண்ணீர் யமன் மனதை இளகச் செய்தது. ""உன் கணவன் உயிரைத் தவிரஎந்த வரம் வேண்டுமானாலும் தருகிறேன்'' என்று வாக்குறுதி கொடுத்தான்.

""வாழையடி வாழையாக என் வம்சம் தழைக்க வேண்டும்'' என்று வரம் கேட்டாள்சாவித்திரி. யமனும் சற்றும் யோசிக்காமல், ""நீ கேட்ட வரம் தந்தோம். உன்வம்சம் வாழையடி வாழையாக வளரும்'' என்றான்.

""யமதர்மரே, மகிழ்ச்சி. உங்கள் வரத்தின்படி என் கணவர் இல்லாமல் என் வம்சம்எப்படித் தழைக்கும்?'' என்று கேட்கவே, கொடுத்த வரத் தைத் திரும்ப பெறமுடியாத நிலையில் எடுத்த உயிரை மீண்டும் கொடுத்து வாழ்த்திவிட்டுச்சென்றான் யமன்.

தான் விரதம் கடைப்பிடித்து பூஜை செய்த நாளிலேயே தன் கணவன் மீண்டும் உயிர்பெற்றதைக் கண்ட சாவித்திரி, ""திருமணமான பெண்கள் தன் கணவனுடன் நீண்ட காலம்வாழ, இப்பூஜை செய்து நல்ல பலனைப் பெறும் பாக்கியத்தை அருள வேண்டும்''என்று அன்னை காமாட்சியிடம் வேண்டி அருள் பெற்றாள் சாவித்திரி.

இதனால்தான் ஸ்ரீகாமாட்சி படம் வைத்து இப்பூஜையை இன்றும் பெண்கள் செய்கிறார்கள்.

அன்னை பராசக்தியான ஸ்ரீகாமாட்சியை வழிபடுவதற்குக் காரணம் என்ன?ஸ்ரீகாமாட்சி
ஒரு சமயம் இறைவன் பரமசிவனார் தனிமையில் இருக்கும்போது, அன்னை பார்வதிஇறைவனின் கண்களை விளையாட்டாகப் பொத்தினாள். அதன் விளைவால் உலகம் முழுவதும் இருள் சூழ்ந்து, உலகில் வாழும் ஜீவன்கள் மிகவும் துன்பத்திற்குஆளாயின. அதனால் கோபம் கொண்ட இறைவன், பார்வதியை பூலோகம் சென்றுதவமியற்றும்படி கட்டளை யிட்டார். பூலோகம் வந்த பார்வதி, மாங்காட் டில்தவமிருந்து, பிறகு, காஞ்சி மாநகருக்கு வந்து கம்பா நதிக்கரையில் அமர்ந்துமண்ணால் சிவலிங்கம் நிறுவி விரதம் மேற்கொண்டு பூஜித்துக் கொண்டிருந்தாள்.

அந்த வேளையில், இறைவனின் திருவிளை யாடலால் கம்பா நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து, பார்வதி பூஜை செய்யும் லிங்கத்தை அடித் துச் செல்ல வந்தது. உடனேசிவலிங்கத்தைக் கட்டிப்பிடித்துக் கொண்டு இறைவனை வேண்டினாள் பார்வதி.இறைவனும் நேரில் காட்சி கொடுத்தார். வெள்ளம் வடிந்தது. இறைவனுடன்பார்வதியும் இணைந்தாள்.

அன்னை காமாட்சி இந்த விரதத்தினை மேற்கொண்டதால் காரடையான் நோன்பு காமாட்சி அம்மன் விரதம் என்று பெயர் பெற்றது.

இந்த நோன்பினை மாசி மாதக்கடைசியிலும் பங்குனி மாதம் ஆரம்பமாகும் வேளையிலும் கடைப்பிடிக்க வேண்டும்.

சாவித்திரியானவள் தன் கணவனுடன் காட்டில் வாழ்ந்தபோது செந்நெல்லையும்காராமணியையும் கொண்டு அடை தயார் செய்து, வெண்ணெய்யுடன் ஸ்ரீகாமாட்சிஅன்னைக்குச் சமர்ப்பித்து வழிபட்டதாலும், மாசி மாதக் கடைசியிலும் பங்குனிஆரம்ப நிலையிலும் விரதமிருந்து கணவன் உயிரைக் காக்க மனபலம் பெற்றதாலும்,அன்று காரடை தயார் செய்து, "உருகாத வெண்ணெயும் ஓரடை யும் வைத்து நோன்புநோற்றேன். ஒரு நாளும் என் கணவர் பிரியாமலிருக்க வேண்டும்' என்றுசுமங்கலிகள் பூஜையின்போது வேண்டிக் கொள்ள வேண்டும் என்பார்கள்.

"மாசிக்கயிறு பாசிப் படியும்' என்பதால், காரடையான் நோன்பின்போது மஞ்சள்சரடினை (கயிறு) வைத்து வழிபட்டு, சுப வேளையில் அதனை பெண்கள் கழுத்தில்அணிந்து கொள்ள வேண்டும். அத்துடன் கணவரிடம் ஆசி பெறுவதால் தங்கள் வாழ்வுசுபமாக இருப்பதுடன், கணவரும் ஆரோக்கி யமாக நீண்ட காலம் வாழ்ந்து வம்சம்தழைத்து வளரும் என்பது நம்பிக்கை.

No comments:

Related Posts with Thumbnails