05 May 2011

அட்சய திருதியையின் சிறப்பு

நாளை தினம் அட்சய திருதியை [06-05-2011].  இன் நாளின் முக்கியத்துவத்தைப் பற்றி இதோ உங்களுக்காக... 


அட்சய திருதியை [அல்லது அக்ஷய தீஜ்] என அறியப்படுவது ஒரு இந்து புனித நாள், அது இந்து மாதமான வைகாசியில் மூன்றாம் திதி (பௌர்ணமி நாள்) சுக்கில பட்சத்தில் வருகின்றதாகும். இந்த நாள் இந்து மும்மூர்த்திகளில் காக்கும் கடவுளான இறைவன் விஷ்ணுவால் ஆளப்படுவதாகும். இது வழமையாக இந்து முனிவரான பரசுராமரின் பிறந்த நாளாகவும் கொண்டாடப்படுகிறது, அவர் இறைவன் விஷ்ணுவின் ஆறாவது அவதாரமாவார். ஹிந்து இதிகாசங்களின்படி, இந்த நாளில் திரேதா யுகம் தொடங்கியது, மேலும் இந்தியாவின் மிகப் புனிதமான புண்ணிய நதியான கங்கை நதி சொர்க்கத்திலிருந்து பூமிக்கு வந்தது. 


மகாபாரதத்தில் - துச்சாதனன் துகில் உரிந்தபோது நிராதரவான நிலையில் இருந்த திரௌபதி, பகவான் ஸ்ரீகிருஷ்ணரைச் சரணடைந்தாள். அப்போது ஸ்ரீகிருஷ்ணரும் தான் இருந்த இடத்தில் இருந்தபடியே, தன் இரண்டு கைகளையும் உயர்த்தி ‘அட்சயம்’ என்றார். ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவின் அருளால், துச்சாதனன் இழுக்க இழுக்க திரௌபதியின் துகில் புதிது புதிதாகத் தோன்றிக் கொண்டே இருந்தது. அந்த திவ்ய ஆடைகள் சபை முழுவதும் குவிந்தன. ‘அட்சயம்’ என்றால் அழியாதது. அதாவது, அள்ள அள்ளக் குறையாதது. மேன்மேலும் தொடர்ந்து வளர்வது என்று அர்த்தம்.

அட்சய திருதியை நாளன்றுதான் கிருத யுகம் பிறந்தது. இதுவே அட்சய திருதியை முக்கியத்-துவம் பெற்றிருப்பதற்கான காரணங்களில் முதல் காரணமாக விளங்குகிறது.

வனவாச காலத்தில் பாண்டவர்கள் அட்சய பாத்திரம் பெற்றதும், மணிமேகலை அமுதசுரபி பாத்திரம் பெற்றதும் ஒரு அட்சய திருதியை திருநாளில்தான்.

குழந்தைகளுக்கு ‘அட்சராப்பியாசம்’ செய்யும் சடங்கு, ‘அட்சய திருதியை’ நாளிலும் சிறப்பாகச் செய்யப்படுகிறது. இந்த தினத்தில் அக்னியில் ஆஹுதி செய்யப்பட்ட பொருள்களும், தானம் செய்யப்பட்ட பொருள்களும் குறைவதே இல்லை. ஆகவே, ரிஷிகள் இந்த தினத்தை ‘அட்சய’ என்றார்கள். தேவர்களுக்காகவும் பித்ருக்களுக்காகவும் நம்மால் தானம் செய்யப்பட்டவை, மேன்மேலும் விருத்தியடைகின்றன.

அட்சய திருதியை அன்று அதிகாலையில் நீராடி, ஸ்ரீமந் நாராயணனின் நாமங்களைச் சொல்லி காரியங்களைத் தொடங்க வேண்டும். இதனால் ஏற்படும் நன்மைகள் பலவாகும். பலவகையான தான, தருமங்களைச் செய்தால் பெரும் புண்ணியம் கிடைக்கும். தீவினைகள் நம்மை அணுகாது.

*ஏழை, எளியவர்களுக்கு உதவி செய்தால், மறுபிறவியில் ராஜயோக வாழ்க்கை அமையும்.

*வறியவர்களுக்கு ஆடைகள் தானம் கொடுத்தால், நோய் நொடிகள் நீங்கும். நலம் விளையும்.

*இந்நாளில் கனிவகைகள் தானம் செய்தால், இன்பமான வாழ்க்கை அமையும். உயர் பதவிகள் கிடைக்கும்.

*குளிர்ந்த நீர், மோர், பானகம் போன்றவற்றை அளித்தால், கல்விச் செல்வம் வளரும்.

*உணவுத் தானியங்களை தானம் செய்தால், விபத்து, அகால மரணம் போன்றவை ஏற்படாது.

*இந்நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால், வறுமை நீங்கும். வளம் சேரும்.

*முக்கியமாக தயிர், அன்னதானம் செய்தால், பாப விமோசனம் ஏற்படும்.

*தண்ணீர்ப் பந்தல் வைத்தல், நிழற்குடை அமைத்தல், காலணி, விசிறி, குடை போன்றவை தானம் செய்தால் புண்ணியம் ஏற்படும்.

இவ்வாறாக அட்சய திருதியையின் பெருமையை ‘பவிஷ்யோத்தர புராணம்’ மிகவும் விரிவாக விவரிக்கிறது.
புனித நீராடல்

 பவானி சங்கமேஸ்வரர் ஆலயம்

அட்சய திருதியை அன்று பவானி சங்கமேஸ்வரர் ஆலயத்தில், ‘முக்கூடல்’ எனப்படும் மூன்று புண்ணிய நதிகள் கூடும் துறையில், ஏராளமான பக்தர்கள் நீராடுகிறார்கள். அட்சய திருதியை அன்று இந்தப் புண்ணிய தீர்த்தத்தில் நீராடினால் பாவங்கள் தொலையும் என்பது நம்பிக்கை.

அட்சய திருதியை அன்று..

கங்கை பூவுலகை முதலில் தொட்ட இடம்தான் கங்கோத்ரி. கங்கையின் வலது கரையில் கங்கோத்ரிக்கான ஒரு கோயில் இருக்கிறது. 20 அடி உயரத்தில் உள்ள இந்த அழகிய கோயில் வெள்ளை கிரானைட் கற்களால் கட்டப்பட்டுள்ளது. அட்சய திருதியை அன்று இந்த கோயில் திறக்கப்படுகிறது. தீபாவளி முடிந்த பிறகு கோயில் மூடப்படும். கடுங்குளிர் காலத்தில் பனி உறைந்து கிடக்கும்போது இந்த திருவுருவச் சிலை 25 கி.மீ. கீழேயுள்ள ‘முகிமடம்’ என்ற கிராமத்துக்கு எடுத்துச் செல்லப்படுகிறது

16 கருட சேவை!

அட்சய திருதியை நாளன்று கும்பகோணம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள பதினாறு பெருமாள் கோயில்களில் இருந்து புறப்படும் 16 பெருமாள்கள் கருட வாகனத்தில் புறப்பட்டு, குடந்தை பெரிய தெருவுக்கு வந்து தரிசனம் தருகின்றனர். இது அற்புத தரிசனமாகும்.

பெண்கள் சொல்ல வேண்டிய பாஞ்சாலி அபய மந்திரம்
வைகாசி மாத வளர்பிறையின் மூன்றாம்நாள், அட்சய திரிதியை நாளாகும். பெண் மானம் காத்த தினம் என இதை அழைக்கலாம். பாண்டவர்களில் மூத்தவரான தர்மர், சூதாடி கவுரவர்களிடம் தனது சொத்துக்களை இழந்ததுடன், தன் மனைவி பாஞ்சாலியையும் பந்தயப் பொருளாக வைத்து இழந்தார்.

துர்க்குணம் கொண்ட துரியோதனன், பாஞ்சாலியின் துகிலுரிய உத்தரவிட்டான். மானம் காக்கவேண்டி பாஞ்சாலி கதறினாள். பீஷ்மர் போன்ற மகாத்மாக்கள்கூட அவளுக்கு உதவ முன்வரவில்லை. இந்நிலையில் தெய்வமே துணை என

சங்க சக்ர கதாபாணே த்வாரகா நிலயா

ச்யுத!

கோவிந்த! புண்டரீகாக்ஷ!

ரக்ஷமாம் சரணாகதம் 

எனக் கதறினாள். ஸ்ரீகண்ணனின் அருளால் பாஞ்சாலியின் மானமும் காப்பாற்றப்பட்டது.

இக்கட்டான சூழ்நிலையில் உள்ள பெண்கள், பாஞ்சாலி சொன்ன அபய மந்திரத்தைச் சொல்லி, கிருஷ்ண பரமாத்மாவின் அனுக்ரஹத்தைப் பெறலாம்.


No comments:

Related Posts with Thumbnails